உள்ளூர் செய்திகள்

புலவன்குடியிருப்பு பாலமுருகன் கோவிலில் பவுர்ணமி பூஜை

Published On 2022-11-08 09:08 GMT   |   Update On 2022-11-08 09:08 GMT
  • புலவன்குடியிருப்பு அரசன் நகரில் சித்தர்கள் வழிபடும் பழனிமலை பாலமுருகன் கோவிலில் பவுர்ணமி பூஜை நடைபெற்றது.
  • இங்குள்ள முருகனை சித்தர் சாமி என்று பக்தர்கள் அழைக்கின்றனர்.

ஏர்வாடி:

நெல்லை மாவட்டம் புலவன்குடியிருப்பு அரசன் நகரில் சித்தர்கள் வழிபடும் பழனிமலை பாலமுருகன் கோவிலில் பவுர்ணமி பூஜை நடைபெற்றது.

முருக பெருமான் அறுபடை வீடுகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பது சிறப்பாக கருதப்படுகிறது. ஒரு சில கோவில்களில் முருக பெருமான் பக்தர்களை ஆட்கொண்டு அருள்புரிவது போல் இக்கோவிலும் பாலமுருகன் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் உள்ள வெள்ளிமலை அடிவாரத்தில் சித்தர்கள் வாழும் பகுதியாக கருதப்படும் இடத்தில் உள்ளதால் இங்குள்ள முருகனை சித்தர் சாமி என்று பக்தர்கள் அழைக்கின்றனர்.

இந்த கோவிலில் நேற்று காலை சிறப்பு ஹோமம் நடத்தப்பட்டு, அபிஷேக அலங்காரத்தில் முருகப்பெருமான் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இங்கு கேரள முறைப்படி பூஜைகள் நடைபெறுகிறது. மாலையில் கோவிலில் உள்ள காமாட்சி அம்மன் சமேத வெள்ளி மலை நாதர், வலம்புரி விநாயகர் , பாலமுருகன் சன்னதிகளில் வேள்வி வளர்க்கப்பட்டு அபிஷேக தீபாரதனைகள் நடந்தது. சிவன், அம்பாள், விநாயகர், முருகன் சன்னதிகள் சேர்ந்து இருப்பதால் பக்தர்கள் திருகுடும்ப சாமி சன்னதி என அழைக்கின்றனர். இங்கு வழிபட்டால் திருமண தடை , பில்லி சூனியம், தொழில் நஷ்டம் போன்ற தடைகள் நிவர்த்தி ஆவதாக கூறுகின்றனர். இந்த ஆலயத்தை கணேஷ்குமார் சுவாமிகள் நிர்வகித்து பூஜை செய்து வருகிறார்.

Tags:    

Similar News