உளுந்தூர்பேட்டை அருகே நாட்டு துப்பாக்கியுடன் சுற்றிய கும்பல்
- புல்லூர் காப்புகாடு பகுதியில் நேற்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர்.
- வனவிலங்குகளை வேட்டை ஆடுவதற்காக நாட்டு துப்பாக்கியுடன் சுற்றி திருந்ததாக தெரிகிறது.
கள்ளக்குறிச்சி:
உளுந்தூர்பேட்டை இடைக்கல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுகண்யா, தலைமை போலீஸ் ஏட்டு சத்தியராஜ் மற்றும் போலீசார் இடைக்கல் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட புல்லூர் காப்புகாடு பகுதியில் நேற்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அந்த வழியாக 5 பேர் நாட்டுதுப்பாக்கியுடன் வந்தனர். அவர்களை பார்த்த போலீசார் உடனே அவர்கள் 5 பேரையும் பிடித்து போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை செய்தனர். இதில் அவர்கள் எறையூர் பகுதியை சேர்ந்த சூசை (வயது 45), தென்போஸ்கோ (23), அந்துவான் கிருஸ்துராஸ் (25), அந்துவான் சான்பீட்டர் (19), மற்றும் மே.மாலூர் பகுதியை சேர்ந்த ஜான் எடிசன் (22) ஆகியோர் என்பதும் இவர்கள் காப்பு காட்டு பகுதியில் வனவிலங்குகளை வேட்டை ஆடுவதற்காக நாட்டு துப்பாக்கியுடன் சுற்றி திருந்ததாக தெரிகிறது. மேலும் போலீசார் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்களிடமிருந்து நாட்டுதுப்பாக்கியையும் பறிமுதல் செய்தனர்.