உள்ளூர் செய்திகள்

பால் விலை உயராமல் இருக்க அரசு வழிவகை செய்ய வேண்டும்- ஜி.கே.வாசன் அறிக்கை

Published On 2023-01-21 09:04 GMT   |   Update On 2023-01-21 09:04 GMT
  • பால் விலை உயர்வு சாதாரண மக்களுக்கு பொருளாதாரத்தில் கூடுதல் சிரமத்தை ஏற்படுத்தி உள்ளது.
  • தனியார் பால் நிறுவனங்களின் பால் விலை உயர்த்தப்படாமல் இருக்க வழி வகை செய்ய வேண்டும்.

சென்னை:

த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் தி.மு.க ஆட்சி பொறுப்பேற்ற பிறகு அரசு மற்றும் தனியார் நிறுவன பால், தயிர், பால் பொருட்களின் விலையானது அவ்வப்போது உயர்த்தப்படுவது ஏற்புடையதல்ல.

கடந்த 2022-ம் ஆண்டு அரசின் ஆவின் நிறுவனம் ஆரஞ்சு நிற பாக்கெட் பால் விலையை உயர்த்தியதும், தனியார் பால் நிறுவனங்கள் 4 முறை பால் விலையை உயர்த்தியதும், இந்த வருடம் இப்போது தனியார் நிறுவனங்கள் பால் விலையை உயர்த்தி விற்பனை செய்வதும் சாதாரண மக்களுக்கு பொருளாதாரத்தில் கூடுதல் சிரமத்தை ஏற்படுத்தி உள்ளது. இதில் தமிழக அரசு கவனம் செலுத்தி, தனியார் பால் நிறுவனங்களின் பால் விலை உயர்த்தப்படாமல் இருக்க வழி வகை செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Tags:    

Similar News