உலக முதலீட்டாளர்கள் தமிழகத்தை நோக்கி வருகிறார்கள்- அமைச்சர் பேச்சு
- தமிழகத்தில் மட்டுமே அனைவரும் ஜாதி மதங்களைக் கடந்து சகோதரர்களாக பழகும் மாண்பு உள்ளது.
- 200-க்கும் மேற்பட்டோர் தங்களை தி.மு.க.வில் இணைத்து கொண்டனர்.
நாகப்பட்டினம்:
நாகையில் பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் தி.மு.க.வில் இணையும் விழா நடைபெற்றது.
நகர் மன்ற தலைவரும், தி.மு.க நகரச் செயலாளருமான மாரிமுத்து தலைமை தாங்கினார்.
தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவரும், நாகை மாவட்ட செயலாளருமான கவுதமன், நாகை தொகுதி மேலிட பார்வையாளர் நிரஞ்சன் துறை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த விழாவில் அ.தி.மு.க முன்னாள் நகர மன்ற துணைத் தலைவர் ஹாஜி சுல்தான் அப்துல் காதர், முன்னாள் மகளிர் அணி செயலாளர் அஞ்சம்மாள் பரமசிவம் மற்றும் அ.ம.மு.க உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த 200 -க்கும் மேற்பட்டோர் தங்களை தி.மு.க.வில் இணைத்து கொண்டனர்.
அவர்களை தமிழக சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மெய்யநாதன், சால்வை அணிவித்து வரவேற்றார்.
பின்னர் அவர் பேசியதாவது:-
தமிழகம் தொடர்ந்து அமைதி பூங்காவாக திகழ்வதால் இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திற்கும் இல்லாத அளவிற்கு பாதுகாப்பாக உள்ளதால் உலக முதலீட்டாளர்கள் தமிழகத்தில் தொழிற்சாலைகளை தொடங்கி வருவது தமிழக முதலமைச்சருக்கு கிடைத்த வெற்றி.
தமிழகத்தில் மட்டுமே அனைவரும் ஜாதி மதங்களைக் கடந்து சகோதரர்களாக பழகும் மாண்பு உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.