தங்கம் விலை பவுனுக்கு ரூ.160 உயர்வு
- தங்கத்தின் விலை இந்த மாத தொடக்கத்தில் வரலாறு காணாத அளவு உயர்ந்து பவுன் ரூ.44 ஆயிரத்தை தாண்டியது.
- தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகமாக உள்ளதால் நகை வாங்க திட்டமிட்டு இருந்தவர்கள் கவலை அடைந்து உள்ளனர்.
சென்னை:
தங்கத்தின் விலை இந்த மாத தொடக்கத்தில் வரலாறு காணாத அளவு உயர்ந்து பவுன் ரூ. 44 ஆயிரத்தை தாண்டியது. அதன் பிறகு ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது.
ஒருநாள் உயருவதும், மறுநாள் கொஞ்சம் குறைவதுமாக தங்கத்தின் விலை கண்ணாமூச்சு காட்டி வருகிறது. நேற்று கிராம் ரூ, 5,545-க்கும், பவுன் ரூ. 44,360 -க்கும் விற்பனை ஆனது.
இன்று கிராம் ரூ.20-ம் பவுன் ரூ.160-ம் அதிகரித்து உள்ளது. இன்று கிராம் ரூ.5,565-க்கும் பவுன் ரூ.44,520-க்கும் விற்பனை ஆகிறது. 10 நாட்களுக்கு மேலாக தங்கத்தின் விலை பவுன் ரூ.44 ஆயிரத்துக்கும் மேலாக விற்பனை ஆகி வருகிறது. இடையில் 22-ந்தேதி மட்டும் பவுன் ரூ.44 ஆயிரத்துக்கு கீழ் வந்தது. அதன் பிறகு இறங்கவில்லை.
தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகமாக உள்ளதால் நகை வாங்க திட்டமிட்டு இருந்தவர்கள் கவலை அடைந்து உள்ளனர்.
தங்கத்தை போலவே வெள்ளி விலையும் உயர்ந்து உள்ளது. கிராம் ரூ.75.70-ல் இருந்து ரூ.76.20 ஆகவும், கிலோ ரூ.76 ஆயிரத்தில் இருந்து ரூ.76,200 ஆகவும் விற்பனை ஆகிறது.