உள்ளூர் செய்திகள்

ரூ.2 லட்சத்துக்கான காசோலையை சங்ககிரி கோட்டாட்சியர் (பொறுப்பு) தணிகாசலம் மாணவன் குடும்பத்தினரிடம் வழங்கிய காட்சி.

ஆற்றில் மூழ்கி உயிரிழந்த கல்லூரி மாணவர் குடும்பத்திற்கு அரசு ரூ.2 லட்சம் நிதி உதவி

Published On 2023-04-15 09:26 GMT   |   Update On 2023-04-15 09:26 GMT
  • எடப்பாடி அருகே கல்வ டங்கம் காவிரி ஆற்றில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு மூழ்கி உயிரிழந்தார்.
  • தமிழக அரசு சார்பில் ரூ. 2 லட்சம் நிவாரண நிதி வழங்க அரசு உத்தரவிட்டது.

மகுடஞ்சாவடி:

சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டம், மகுடஞ்சா வடி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கன்னந்தேரி ஊராட்சி கோசாரிப்பட்டி காட்டு வளவில் வசித்து வந்த மாது மகன் மணி கண்டன்(வயது20). கல்லூரி மாணவரான இவர் எடப்பாடி அருகே கல்வ டங்கம் காவிரி ஆற்றில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு மூழ்கி உயிரிழந்தார்.

அவரது குடும்பத்திற்கு தமிழக அரசு சார்பில் ரூ. 2 லட்சம் நிவாரண நிதி வழங்க அரசு உத்தரவிட்டது. இதை யடுத்து ரூ.2 லட்சத்துக்கான காசோலையை சங்ககிரி கோட்டாட்சியர் (பொறுப்பு) தணிகாசலம் அந்த மாண வன் வீட்டிற்கு நேரில் சென்று அவரது குடும்பத்தி னரிடம் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் சங்ககிரி தாசில்தார் பானுமதி, எர்ணாபுரம் வருவாய் ஆய்வாளர் செல்வராஜ், கன்னந்தேரி கிராம நிர்வாக அலுவலர் குப்புசாமி உள்ளிட்ட அரசு அலுவ லர்களும், மகுடஞ்சாவடி ஒன்றிய திமுக விவசாய அணி அமைப்பாளர் சுரேஷ்குமார் உள்ளிட்ட தி.மு.க. நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News