அரசு பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி
- அரிசி மாவு போன்றவற்றால் சிலைகள் செய்யலாம்.
- சிலைகளை செய்வதற்கு ரசாயன வண்ணங்கள் பயன்படுத்த தவிர்க்க வேண்டும்.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்ட தேசிய பசுமை படையும் தோப்பு துறை அரசினர் மாதிரி மேல்நிலைப்பள்ளியும் இணைந்து மாசில்லாத இயற்கை வழி விநாயகர் சதுர்த்தி வழிபாட்டை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.
வேதாரண்யம் நகராட்சியில் இருந்து பேருந்து நிலையம் கடைவீதி வழியாக உப்பு சத்தியாகிரகம் நினைவு மண்டபம் வரை நடைபெற்ற பேரணியில் 300க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் தூய்மை பணியாளர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
பேரணியை நகராட்சி தலைவர் புகழேந்தி தெரடங்கி வைத்தார்.
விநாயகர் சதுர்த்தி கொண்டாடும் பொழுது களிமண், மஞ்சள் ,அரிசி மாவு போன்றவற்றால் சிலைகள் செய்யலாம், ரசாயன வண்ணங்களை தவிர்க்க வேண்டும், பிளாஸ்டிக், தர்மாகோல், ரங்கோலி ஸ்டிக்கர், பிளாஸ்டர் ஆப் பாரிஸ், போன்றவற்றை தவிர்க்க வேண்டும்,
இயற்கையில் கிடைக்கும் மரப்பட்டைகள் இயற்கை வண்ணங்கள் பூக்கள் வண்ணக்கற்கள் தென்னை தோரணங்கள் மாவிலை இவற்றை வழிபாட்டிற்கு பயன்படுத்தலாம், அலங்காரம் செய்த குப்பைகளை நீர் நிலைகளுக்கு கொண்டு செல்லாமல் தவிர்க்கலாம்.
பிளாஸ்டிக் பயன்பாட்டு குறைப்பு ,பிளாஸ்டிக் மறுசுழற்சி, மறு பயன்பாடு இவற்றின், மூலம் பிளாஸ்டிக் நீர் நிலைகளை சென்றடையாமல் தவிர்க்கலாம், மாசில்லாமல் விநாயகர் வழிபட்டு சுற்றுச்சூழலை காப்போம் என்று மாவட்ட தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் முத்தமிழ் ஆனந்தன் மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்.
பிளாஸ்டிக் தவிர்த்தல் குறித்து பேரணியில் மாணவர்கள் முழக்கங்களை எழுப்பினர் நிகழ்ச்சியில் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் விநியோ கிக்கப்பட்டன.
இதற்கான ஏற்பாடுகளை பள்ளி தேசிய பசுமை படை ஆசிரியர் வி கண்ணையன் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் செய்திருந்தனர்.