கீழநத்தம் பஞ்சாயத்தில் கிராம சபை கூட்டம்
- கூட்டத்தில் நவம்பர் 1-ஐ உள்ளாட்சி தினமாக அறிவித்த முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.
- ஊராட்சி செயலர் சுபாஷ் நிறைவேற்றப்பட வேண்டிய தீர்மானங்களை வாசித்தார்.
நெல்லை:
நவம்பர் 1-ந்தேதி உள்ளா ட்சி தினத்தை முன்னிட்டு பாளை யூனியன் கீழநத்தம் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் வடக்கூரில் ஊராட்சி மன்ற தலைவர் அனுராதா ரவி முருகன் தலைமையில் இன்று நடைபெற்றது.
கூட்டத்தில் நவம்பர் 1-ஐ உள்ளாட்சி தினமாக அறிவித்த முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.
மேலும் வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பது, இணையவழி வரி செலுத்து தல், கிராம தன்னிறைவு திட்டம் 2023-24 மற்றும் 2024-25-க்கு எடுக்கப்பட வேண்டிய பணிகள், பொது இடங்களில் வைக்கப் பட்டுள்ள ஜாதிய சின்னங்களை அகற்றுதல், ஊராட்சி அனுமதி இன்றி வைக்கப்பட்டுள்ள விளம்பர பலகைகளை அகற்றுதல் மற்றும் ஊராட்சியின் நீடித்த வளர்ச்சி பற்றி விவாதிக் கப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில் ஊராட்சி செயலர் சுபாஷ் நிறைவேற்றப்பட வேண்டிய தீர்மானங்களை வாசித்தார். கூட்டத்தில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் லட்சுமி, மக்கள் நலப் பணியாளர் மாரி யம்மாள், பணித்தள பொறுப்பாளர் சோபனா, சுகாதார ஆய்வாளர் புகாரி, காச நோய் ஆய்வாளர் காஞ்சனா, கிராம சுகாதார செவிலியர் பூமணி, கிராம நிர்வாக அலுவலர் மைதீன், தலையாரி வேல்பாண்டி, வார்டு உறுப்பினர்கள் பல வேசம் இசக்கி பாண்டி, ஸ்ரீலதா, பாளை மத்திய ஒன்றிய தி.மு.க. ஆதி திரா விடர் நல அணி அமை ப்பாளர் செல்லப்பா, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்கள் ராமச்சந்திரன், தண்டபாணி, குமரன், வடக்கூர் ஆதி திராவிடர் பள்ளி நிர்வாகி சுந்தரராஜ், பிருந்தாவன் நகர் கார்த்திக், தோட்டக் கலைத்துறை கமலேசன், துணை கமிஷனர் (ஜி.எஸ்.டி.) கதிர்வேல், விஜிலென்ஸ் ஸ்டீபன் கனகராஜ் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
முடிவில் சிறப்பாக செயல்பட்ட தூய்மை காவ லர்கள், மகளிர் சுய உதவிக் குழுக்கள் கவுரவிக்கப் பட்டனர்.