உள்ளூர் செய்திகள்

கூட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர் முரளிதரனிடம் பெண் ஒருவர் கோரிக்கை மனு வழங்கிய காட்சி.

பெருகோபனப்பள்ளி ஊராட்சியில் கிராம சபை கூட்டம்

Published On 2023-08-16 09:55 GMT   |   Update On 2023-08-16 09:55 GMT
  • சுதந்திர தின சிராம சபா கூட்டம் நாயுடு குருகு ப்பட்டி அரசு தொடக்கப் பள்ளி வளாகத்தில் ஊராட்சி மன்ற தலைவர் முரளிதரன் தலைமையில் நடைபெற்றது.
  • கூட்டத்திற்கான ஏற்பாடுகளை ஊராட்சி செயலர் முருகேசன் (பொறுப்பு) செய்திருந்தார்.

மத்தூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் ஒன்றியம், பெரு கோபனப்பள்ளி ஊராட்சி யில் சுதந்திர தின சிராம சபா கூட்டம் நாயுடு குருகு ப்பட்டி அரசு தொடக்கப் பள்ளி வளாகத்தில் ஊராட்சி மன்ற தலைவர் முரளிதரன் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பொதுமக்கள் வீட்டு மனை பட்டா, குடிநீர் வசதி, தமிழக அரசு வழங்கும் இலவச வீடு வேண்டியும், முதியோர் உதவித் தொகை, கழிவு நீர் கால்வாய் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊராட்சி மன்றத் தலைவர் முரளிதரனிடம் மனுக்கள் அளித்தனர். இதனை தொடர்ந்து பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இக் கூட்டத்தில் ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் சத்தியா சரவணன், ஊராட்சி வார்டு உறுப்பி னர்கள், ஊரக துறை, வேளாண்மைத்துறை, கல்வித்துறை, வருவாய் துறை, தொண்டு நிறு வனங்கள், மகளீர் சுய உதவிக் குழுக்கள் உள்ளிட்ட அரசு அலு வலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

இக் கூட்டத்திற்கான ஏற்பாடுகளை ஊராட்சி செயலர் முருகேசன் (பொறுப்பு) செய்திருந்தார்.

Tags:    

Similar News