உள்ளூர் செய்திகள்

9, 10, 11, 12-ம் வகுப்புக்கு இன்று தொடங்கியது அரையாண்டு தேர்வு

Published On 2022-12-16 10:01 GMT   |   Update On 2022-12-16 10:01 GMT
  • அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் மெட்ரிக்குலேஷன் பள்ளிகளில் 9, 10, 11, 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு இன்று முதல் 23-ம் தேதி வரை அரையாண்டு தேர்வு நடக்கிறது.
  • 23-ந்தேதி தேர்வுகள் அனைத்தும் முடிகின்றன. அதை தொடர்ந்து பள்ளிகளுக்கு கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறை விடப்படுகிறது. மீண்டும், 2-ந்தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளன.

சென்னை:

தமிழக பாடத்திட்டத்தில் படிக்கும் பள்ளி மாணவர்களுக்கான அரையாண்டு தேர்வு இன்று தொடங்கியது.

தமிழகத்தில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும், தனியார் மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன் பள்ளிகளில் இன்று 9, 10, 11, பிளஸ்-2 வகுப்புகளுக்கு அரையாண்டு தேர்வு இன்று தொடங்கி நடந்து வருகிறது.

முதலில் மொழிப் பாடத்துக்கும் பின், அறிவியல், கணிதம், பொருளியல் உள்ளிட்ட மற்ற பாடங்களுக்கும் தேர்வு நடக்கிறது. மாவட்ட அளவில், பொதுவான வினாத்தாள்கள் வழங்கப்பட உள்ளன.

அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் மெட்ரிக்குலேஷன் பள்ளிகளில் 9, 10, 11, 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு இன்று முதல் 23-ம் தேதி வரை அரையாண்டு தேர்வு நடக்கிறது.

6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு 19-ந் தேதி தொடங்கி 23-ம் தேதி வரை தேர்வு நடக்கிறது. இந்த தேர்வுக்கான வினாத்தாள்கள் அந்தந்த மாவட்டத்தில் முதன்மை கல்வி அதிகாரிகள் மூலம் தயாரிக்கப்பட்டு உள்ளது.

வினாத்தாள்களை ஆசிரியர்கள், பணியாளர்கள் மொபைல் போனில் புகைப்படம் எடுக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. வருகிற 23-ந்தேதி தேர்வுகள் அனைத்தும் முடிகின்றன. அதை தொடர்ந்து பள்ளிகளுக்கு கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறை விடப்படுகிறது. மீண்டும் 2-ந்தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளன.

Tags:    

Similar News