உள்ளூர் செய்திகள்

தவறி விட்ட நகையை உரியவரிடம் சிதம்பரம் நகர போலீசார் ஒப்படைத்த போது எடுத்தபடம்.

சிதம்பரத்தில் வங்கி வாசலில் தவறவிட்ட தங்க நகை உரியவரிடம் ஒப்படைப்பு

Published On 2023-04-27 08:14 GMT   |   Update On 2023-04-27 08:14 GMT
  • திருஞானம் 3.5 பவுன் நகையை வங்கியில் இருந்து மீட்டு வெளியில் வந்து சட்டையின் உள் பையில் வைக்கும் போது கீழே தவறவிட்டதாக தெரிகிறது.
  • போலீசார்ர் சம்பவ நடந்த வங்கி பகுதிக்கு சென்று சுற்றியுள்ள சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்தனர்.

கடலூர்:

சிதம்பரத்தில் தவறவிட்ட நகையை சி.சி.டி.வி. கேமரா மூலம் கண்டுபிடித்த போலீசார். அதனை உரியவரிடம் ஒப்படைத்தனர்.  சிதம்பரம் உசூப்பூர் சபாநகரைச் சேர்ந்த ராமமூர்த்தி மகன் திருஞானம் (வயது 56). இவர் 3.5 பவுன் நகையை வங்கியில் இருந்து மீட்டு வெளியில் வந்து சட்டையின் உள் பையில் வைக்கும் போது கீழே தவறவிட்டதாக தெரிகிறது. இதுகுறித்து திருஞானம் சிதம்பரம் நகர போலீசாரிடம் புகார் அளித்தார். சிதம்பரம் உதவி போலீஸ் சூப்பிரண்டு ரகுபதி உத்தரவின்படி, சிதம்பரம் நகர போலீசார் மற்றும் குற்றப்பிரிவு தனிப்படை போலீசார்ர் சம்பவ நடந்த வங்கி பகுதிக்கு சென்று சுற்றியுள்ள சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்தனர்.

அதில் அடையாளம் தெரியாத பெண் கீழே விழுந்த நகையை எடுத்து சென்றது தெரியவந்தது. போலீசாரின் விசாரணையில், அவர் பின்னலூரைச் சேர்ந்த பெண் என்பது தெரிய வந்தது. அப்பெண் நகையை போலீசாரிடம் ஒப்படைத்தார். நகையை மீட்டு தவறவிட்ட திருஞானத்திடம் சிதம்பரம் நகர சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மற்றும் குற்றப்பிரிவு போலீசார் நகையை ஒப்படைத்தனர்.

Tags:    

Similar News