- நூல் நிலையம் மற்றும் சேவை மையம் கட்டிடங்கள் மற்றும் வளாகங்களிலும் மேற்கூரைகளிலும் தூய்மை பணி நடைபெற்றது.
- தற்பொழுது தேவைப்படும் நீரை விட 2 மடங்கு வேளாண்மைக்கும், 7 மடங்கு தொழிற்சாலைகளுக்கும் தேவைப்படும்.
திருத்துறைப்பூண்டி:
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே கட்டிமேடு ஊராட்சியில் தூய்மை மற்றும் சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சி தூய்மை மற்றும் துப்புரவு பணியாளர்களை கொண்டு ஊராட்சி மன்ற அலுவலகம், கிராம நிர்வாக அலுவலர், துணை சுகாதார மையம், அங்கன்வாடி மையம், ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி, நூல் நிலையம் மற்றும் சேவை மையம் கட்டிடங்கள் மற்றும் வளாகங்களிலும் மேற்கூரைகளிலும் தூய்மை பணி நடைபெற்றது
ஊராட்சி மன்ற தலைவர் மாலினி ரவிச்சந்திரன் திடக்கழிவு மேலாண்மை மக்கும் குப்பை மக்கா குப்பை தரம் பிரித்து அளிக்க கேட்டுக் கொண்டதோடு சுற்றுப்புறத் தூய்மை உடல் நலக்கு நன்மை பயக்கும் திறந்த நிலையில் மலம் கழித்தல் அற்ற ஊராட்சியாக முற்றிலும் மாற வேண்டும்.
ஒவ்வொரு வீட்டிலும் கழிவறையை பயன்படுத்த வேண்டும். மேலும் மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைக்க வேண்டும். 2025ம் ஆண்டில் தற்பொழுது தேவைப்படும் நீரை விட 2 மடங்கு வேளாண்மைக்கும், 7 மடங்கு தொழிற்சாலைகளுக்கும் தேவைப்படும்
இதனால் ஐம்பது சதவீதம் நீர் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளது.ஆகவே குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த கேட்டுக் கொள்ளப்படுகிறது.
ஒவ்வொருவரும் கடைக்கு செல்லும் பொழுது தமிழக முதல்அமைச்சரின் உத்தரவுபடி மஞ்சப்பை எடுத்துச் செல்ல வேண்டும். ஒருமுறை பயன்படுத்தும் கேரி பேக்கை முற்றிலும் தடுக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.
துணைத் தலைவர் பாக்கியராஜ், செயலர் புவனேஸ்வரன், சமூக ஆர்வலர்கள் ரவிச்சந்திரன், முத்துக்குமார், அப்பு, வார்டு உறுப்பினர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.