உள்ளூர் செய்திகள்

தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

Published On 2024-06-03 08:26 GMT   |   Update On 2024-06-03 08:26 GMT
  • இன்று ராணிப்பேட்டை, வேலூரில் கனமழை வாய்ப்பு இருக்கிறது.
  • சென்னையில் 48 மணிநேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.

இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தென் தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவிவருவதன் காரணமாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் ஆங்காங்கே கனமழை பெய்து வருகிறது.

இந்த வாளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று ராணிப்பேட்டை, வேலூரில் கனமழை வாய்ப்பு இருக்கிறது.

அதேபோல 5-ந்தேதியை பொறுத்தவரைக்கும் தமிழ்நாட்டில் கோவை, நீலகிரி, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, சேலம், ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல்லில் ஆகிய பகுதிகளில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையை பொறுத்த வரை அடுத்த 48 மணிநேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரில் சில பகுதிகளில் மிதமானது முதல் லேசானது வரை மழை பெய்யலாம் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு பருவமழை கேரளா மற்றும் தென் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொடங்கியதன் காரணமாக மழை பெய்து வருகிறது. இந்த தென்மேற்கு பருவ மழையின் காரணமாக வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்னும் 2 நாட்களுக்கு மழை இருக்கும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News