உள்ளூர் செய்திகள்

நிலக்கோட்டை பஸ் நிலையத்தில் தேங்கி உள்ள மழைநீர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் இடி மின்னலுடன் பலத்த மழை

Published On 2023-11-08 05:45 GMT   |   Update On 2023-11-08 05:45 GMT
  • திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று இரவு 7 மணிக்கு திடீரென மழை பெய்யத் தொடங்கி சுமார் 1½ மணி நேரம் இடி, மின்னலுடன் மழை பெய்தது.
  • 2 ஆண்டு களுக்கு பின்பு கன மழை பெய்ததாக இப்பகுதி பொதுமக்கள் தெரிவித்தனர்.

நிலக்கோட்டை:

திண்டுக்கல் மாவட்ட த்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதனால் தாழ்வான பகுதிகள், சாலைகளில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. நிலக்கோட்டை பகுதியில் சில நாட்களாக சாரல் மழை பெய்து வந்தது. இந்நிலையில் நேற்று காலையில் இருந்தே வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்தது. இரவு 7 மணிக்கு திடீரென மழை பெய்யத் தொடங்கி சுமார் 1½ மணி நேரம் இடி, மின்னலுடன் மழை பெய்தது. இடி, மின்னல் அதிகமாக இருந்ததால் மின் தடை ஏற்பட்டது. மேலும் பொதுமக்கள் அச்சம் அடைந்தனர்.

2 ஆண்டு களுக்கு பின்பு கன மழை பெய்ததாக இப்பகுதி பொதுமக்கள் தெரிவித்த னர். சிறுவர், சிறுமியர் இடி சத்தத்தை கேட்டு பயந்து நடுங்கினர். மேலும் நிலக்கோட்டை நீதிமன்றம், கிராமம் நிர்வாக அலுவலகம், பஸ் நிலையம், அணைப்பட்டி செல்லும் சாலையில் மழைநீர் தேங்கி நின்றது.

தற்போது மழை காலமாக இருப்பதால் ஆங்காங்கே உள்ள சாக்கடைகளை சுத்தப்படுத்த வேண்டும் என்று பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்தனர். இதேபோல் மாவட்டத்தில் வத்தலக்குண்டு, செம்பட்டி, கன்னிவாடி, பழனி, வேட சந்தூர், ஒட்டன்சத்திரம், வடமதுரை, அய்யலூர், நத்தம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது.

கொடைக்கானல் ரோஸ் கார்டன் 16, பூங்கா 14, சத்திரப்பட்டி 7, நிலக்கோ ட்டை 16, வேடசந்தூர் 30.5, புகையலை ஆராய்ச்சி நிலையம் 29.6, காமாட்சிபுரம் 45.80 என மாவட்டம் முழுவதும் 158.90 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.

Tags:    

Similar News