22-ந் தேதி நடக்கிறது: தேனியில் மாவட்ட அளவிலான கல்விக்கடன் முகாம்
- தேனி மாவட்ட நிர்வாகம் சார்பாக கல்விக் கடன் முகாம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 22-ந் தேதி நடைபெற உள்ளது.
- இந்த அரிய வாய்ப்பினை கல்லூரி மாணவ- மாணவி கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.
தேனி:
தேனி மாவட்ட நிர்வாகம் சார்பாக கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு மாவட்ட அளவிலான கல்விக் கடன் முகாம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 22-ந் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது.
இந்த கல்விக் கடன் முகாமில் பொறியியல் கல்லூரி, மருத்துவ கல்லூரி, வேளாண் மற்றும் தோட்டக்கலை கல்லூரி, கால்நடை மருத்துவ கல்லூரி, கலை மற்றும் அறிவியல் கல்லூரி, மற்றும் மாநில, மத்திய அரசின் பதிவு பெற்ற அனைத்து வகையான கல்லூரிகளில் படிக்கின்ற முதலாம் ஆண்டு முதல் இறுதி ஆண்டு வரை இளங்கலை மற்றும் முதுகலை படிக்கும் மாணவ- மாணவிகள் இந்த முகாமில் கலந்து கொண்டு பயன் பெறலாம்.
தேனி மாவட்டதில் உள்ள அனைத்து வங்கிகளின் பிரதிநிதிகள் இந்த முகாமில் கலந்துகொண்டு, மாண வர்கள் இணையதளத்தில் கல்விக்கடன் விண்ண ப்பத்தை பதிவு செய்வத ற்கும், பரிசீலனை செய்வத ற்கும் உறுதுணையாக இருப்பார்கள்.
இம்முகாமில் கலந்து கொள்ள விரும்பும் மாணவர்கள் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் நகல், கல்லூரி அடையாள அட்டை நகல், ஆதார் அட்டை நகல், ஆண்டு வருமான சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், முதல் பட்டதாரி சான்றிதழ், குடும்ப அட்டை நகல், பான் அட்டை, வங்கிக்கணக்கு புத்தகம் நகல், கவுன்லிங் மற்றும் கல்லூரி அட்மிஷன் கடிதம், கல்விக்கட்டண விவரம், 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகிய ஆவணங்களை கொண்டுவர வேண்டும்.
இந்த அரிய வாய்ப்பினை கல்லூரி மாணவ- மாணவி கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.