108 அரசு மேல்நிலைப்பள்ளிகளில் உயர்கல்வி வழிகாட்டுதல் குழு-தருமபுரி முதன்மை கல்வி அலுவலர் தகவல்
- இந்த குழவின் மூலம் உயர்கல்வியில் சேருவதற்கான ஆலோச னைகள், விண்ணப்பிக்கும் வழிமுறைகளை மாண வர்கள் அறிந்து கொள்ளலாம்.
- இதுதவிர, உயர்கல்வியில் எத்தனை விதமானபடிப்புகள் உள்ளன.
தருமபுரி,
தமிழ்நாடு முழுவதும் பிளஸ்-2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் 13-ந் தேதி தொடங்கி ஏப்ரல் மாதம் 3-ம் தேதி முடிந்தது. தற்போது பிளஸ்-2 விடைத்தாள்கள் திருத்தும் பணி முடிந்து கணினியில் ஏற்றும் பணி நடக்கிறது.
வருகிற 8-ம் தேதி சார்பில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. அன்றைய தினமே மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு மேல்நிலைப்பள்ளிகளிலும் உயர் கல்வி வழிகாட்டுதல் குழு கூடி மாணவர்களுக்கு உயர் கல்வி வழிகாட்டுதல்களை மேற்கொள்ளும் என்று அரசு அறிவித்துள்ளது.
அதன்படி தருமபுரி மாவட்டத்தில் உள்ள 108 அரசு மேல்நிலைப்பள்ளிகளில் வருகிற 8-ம் தேதி உயர்கல்வி வழிகாட்டுதல் குழு செயல்படும்.
இந்த வழிகாட்டுதல் குழுவினர் மாணவர்கள் அனைவரும் விடுபடாமல் உயர்கல்வி கற்க நடவடிக்கை மேற்கொள்ள வழிகாட்டுகின்றனர்.
இதுகுறித்து தருமபுரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் குணசேகரன் கூறுகையில், நான் முதல்வன் திட்டத்தின் கீழ் தருமபுரி மாவட்டத்தில் உள்ள 108 அரசு மேல் நிலைப் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு உயர்கல்விக்கான ஆலோ சனை வழங்குவதற்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதன்படி அனைத்து பள்ளிகளிலும் தலைமை ஆசிரியர் தலைமையில் 20 பேர் கொண்ட உயர் கல்வி வழிகாட்டுதல் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்தக் குழுவில் உயர்கல்வி வழிகாட்டி பயிற்சி பெற்ற ஆசிரியர், முன்னாள் மாணவர், பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர் மற்றும் என்.எஸ்.எஸ். மாணவர் ஆகியோர் இடம் பெற்றிருப்பார்கள்.
இந்த குழவின் மூலம் உயர்கல்வியில் சேருவதற்கான ஆலோச னைகள், விண்ணப்பிக்கும் வழிமுறைகளை மாண வர்கள் அறிந்து கொள்ளலாம். இதுதவிர, உயர்கல்வியில் எத்தனை விதமானபடிப்புகள் உள்ளன.
அதற்கான வேலை வாய்ப்புகள் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் குழுவினர் தெரிவிப்பார்கள்.மேலும், தேசிய நுழைவுத்தேர்வுகள் சார்ந்து பல்வேறு தகவல்களையும் உயர்கல்வி வழிகாட்டுதல் குழுவினர் தெரிவிப்பார்கள் என்று கூறினார்.