உள்ளூர் செய்திகள்

கோப்புப்படம்

சாலையின் தரம் குறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆய்வு

Published On 2023-05-24 09:25 GMT   |   Update On 2023-05-24 09:25 GMT
  • பரவை நல்லார் மாரியம்மன் கோவில் முதல் தெற்குபொய்கை நல்லூர் வரை பணிகள் நடைபெற்று வருகிறது.
  • சாலையின் நீளம், அகலம் மற்றும் கனம் உள்ளிட்டவற்றை அளவீடுகள் மூலம் ஆய்வு செய்தனர்.

நாகப்பட்டினம்:

தமிழகம் முழுவதும் நெடுஞ்சாலை துறையில் நடைபெற்று வரும் அனைத்து பணிகளின் தரம் மற்றும் கட்டுமானம் குறித்து ஆண்டுதோறும் தணிக்கை செய்ய மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி இந்த ஆண்டு நாகை மாவட்டத்தில் நெடுஞ்சாலைத்துறை நபார்டு மற்றும் கிராம சாலைகள் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் சாலை அமைக்கும் பணிகளை நெடுஞ்சாலை துறை தஞ்சாவூர் வட்ட கண்காணிப்பு பொறியாளர் (திட்டங்கள்) கிருஷ்ணசாமி தலைமையில் என்ஜினீயர் குழுவினர் ஆய்வு செய்தனர்.

இதில் நாகை அருகே பரவை நல்லார் மாரியம்மன் கோவில் முதல் தெற்குபொய்கை நல்லூர் வரை சாலையின் தரம் உயர்த்தும் பணியினை தணிக்கை குழுவினர் ஆய்வு செய்தனர். அப்போது சாலையின் நீளம், அகலம் மற்றும் கனம் உள்ளிட்டவற்றை அளவீடுகள் மூலம் ஆய்வு செய்தனர். தொடர்ந்து சாலையின் தரம் குறித்து ஆய்வு செய்தனர்.

ஆய்வின்போது திருச்சி நெடுஞ்சாலை துறை (திட்டங்கள்) கோட்ட பொறியாளர் முருகானந்தம், நாகை நெடுஞ்சாலைத்துறை நபார்டு மற்றும் கிராம சாலைகள் கோட்ட பொறியாளர் சிவக்குமார் உள்பட நெடுஞ்சாலைத்துறை என்ஜினீயர்கள் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News