தஞ்சை திருஇருதய பேராலயத்தில் புனித வியாழன் சிறப்பு பிரார்த்தனை
- சகாயராஜ் அடிகளார் 12 முதியவர்களின் பாதங்களை கழுவினார்.
- புனித வெள்ளி வழிபாடு இன்று மாலை பேராலயத்தில் நடைபெறுகிறது.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் திருஇருதய பேராலயத்தில் மறை மாவட்ட பரிபாலகர் சகாயராஜ் தலைமையில் புனித வியாழன் சிறப்பு பிரார்த்தனை வழிபாடு நடை பெற்றது.
முன்னதாக பேராலயத்தில் கூட்டு பாடல் திருப்பலி நடை பெற்றது.
இதில் இயேசு கடைசி இரவு உணவின் போது தமது சீடர்களின் பாதங்களை கழுவியதை நினைவு கூறும் வகையில், சகாயராஜ் அடிகளார் 12 முதியவர்களின் பாதங்களை கழுவினார்.
தொடர்ந்து சிறப்பு வழிபாடு நடை பெற்றது.
இதில் பேராலய பங்குத்தந்தை பிரபாகர், உதவி பங்கு தந்தை பிரவின், ஆயரின் செயலர் ஆன்ரு செல்வகுமார் மற்றும் குருக்கள் கலந்து கொண்டனர்.
முடிவில் நற்கருணை பவனி நடை பெற்றது.
இதில் ஏராளமான இறைமக்கள் கலந்து கொண்டனர்.
இயேசுவின் பாடுகளை தியானிக்கும் புனித வெள்ளி வழிபாடு இன்று வெள்ளிக்கிழமை மாலை 5.30 மணிக்கு திருஇருதய பேராலயத்தில் நடை பெறுகிறது.
சிலுவை பாதை வழிபாடு முடிந்ததும் சிலுவையி லிருந்து இயேசுவின் உடல் இறக்கப்பட்டு புனித வியாகுல மாதா ஆலயத்திற்கு பவனியாக கொண்டு செல்ல படுகிறது.