உள்ளூர் செய்திகள்

கன மழைக்கு இடிந்து விழுந்த வீட்டு சுவர்.

போடியில் கன மழைக்கு இடிந்து விழுந்த வீடு

Published On 2023-11-05 07:24 GMT   |   Update On 2023-11-05 07:24 GMT
  • போடியில் நேற்று பெய்த கன மழை காரணமாக 3 வீட்டு சுவர்களும் இடிந்து விழுந்தது.
  • அதிர்ஷ்டவசமாக சுவர் வெளிப்புறம் விழுந்த தால் வீட்டில் இருந்தவர்கள் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர்.

மேலசொக்கநாதபுரம்:

தேனி மாவட்டம் போடி குலாலர் பாளையத்தில் உள்ள தனியார் பள்ளி அருகே குடியிப்புகள் உள்ளன. இங்கு செண்பகவேல் என்பவருக்கு சொந்த வீடுகளில் 3 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

நேற்று பெய்த கன மழை காரணமாக இந்த 3 வீட்டு சுவர்களும் இடிந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக சுவர் வெளிப்புறம் விழுந்த தால் வீட்டில் இருந்தவர்கள் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். இருந்தபோதும் பெரும்பாலான பகுதி சேதம் அடைந்ததால் குடும்பத்தினர் கடும் சிரமம் அடைந்தனர்.

நகராட்சி அலுவலகம் பின்புறம் அரசு ஆஸ்பத்திரியை ஒட்டியுள்ள சாலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆக்கி ரமிப்புகள் அகற்றப்பட்டன. அதில் சில மண்மேடுகள் அப்புறப்படுத்தாததால் சாக்கடையில் அடைத்து நின்றது. இந்த நிலையில் நேற்று சுமார் 5 மணி நேரத்துக்கு மேலாக போடி யில் கன மழை பெய்தது.

இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இந்த சாலையில் தண்ணீர் செல்ல வழியி ல்லாததால் கழிவு நீருடன் மழை நீர் கலந்து வீடுகளுக்குள் புகுந்தது. இதனால் பொதுமக்கள் குழந்தைகள், முதியவர்களுடன் மிகுந்த சிரமத்துக்குள்ளானார்கள். சம்பவம் குறித்து அறிந்ததும் நகராட்சி தூய்மை பணியாளர்கள் விரைந்து வந்து சாக்கடை கழிவுகளை அகற்றினர். அதில் கண்ணாடி பாட்டில்கள், பிளாஸ்டிக் கழிவுகள் அதிக அளவில் இருந்ததால் மிகவும் சிரமம் அடைந்தனர்.

Tags:    

Similar News