உள்ளூர் செய்திகள்

கடையம் யூனியனில் வீட்டு வரி ரசீதை கணினி மூலம் அச்சிட்டு வழங்க வேண்டும்- பொதுமக்கள் கோரிக்கை

Published On 2022-09-05 09:35 GMT   |   Update On 2022-09-05 09:35 GMT
  • காலியாக உள்ள ஊராட்சிகளுக்கும் ஒரு சில ஊராட்சி செயலர்கள் கூடுதலாக பார்க்கின்றனர்.
  • பல ஊராட்சிகளில் குறைந்த பட்ச வீட்டு வரி தீர்வை கூடுதலாக வசூலிக்கப்படுவதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

கடையம்:

தென்காசி மாவட்டம் கடையம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் 23 கிராம பஞ்சாயத்துக்கள் உள்ளன. இதில் 6 ஊராட்சிகளில் செயலர் பணியிடம் காலியாக உள்ளது. பணியிடங்கள் நிரப்பப்படாததால், காலியாக உள்ள ஊராட்சிகளுக்கும் ஒரு சில ஊராட்சி செயலர்கள் கூடுதலாக பார்க்கின்றனர். இதனால் கூடுதலாக வேலை பார்க்கும் செயலாளர்களுக்கு பணி சுமை ஏற்பட்டுள்ளது.

மேலும் பொதுமக்களும் காலியாக உள்ள ஊராட்சி அலுவலகத்தில் செயலா ளர்கள் அவ்வப்போது இல்லாத தால் ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர். இந்த நிலை தொடர்ந்து பல மாதங்களாக நடைபெற்று வருகிறது. மேலும் ஒரு சில ஊராட்சிகளில் தலைவர் களுக்கும், செயலருக்கும் கருத்துவேறுபாடு கடுமையாக நிலவி வருகிறது. இதனால் அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவதில் காலதாமதம் ஏற்படுவ தாக பொதுமக்கள் புகார் கூறுகின்றனர்.

இந்த நிலையில் யூனியனு க்குட்பட்ட ஊராட்சிகளுக்கு பல ஆண்டுகளுக்கு முன்பே கம்ப்யூட்டர் மற்றும் பிரிண்டர் வழங்கப்பட்டும் இது வரை எந்த ஊராட்சிகளிலும் கணினி முறையில் பிரிண்ட் செய்யப்பட்ட ரசீது வழங்கப்படவில்லை. கீழப்பாவூர் ,ஆலங்குளம் உள்பட பல யூனியன் பகுதியிலுள்ள பல ஊராட்சிகளில் வீட்டு வரி ரசீது பிரிண்ட் செய்யப்பட்டு வழங்கப்பட்டு வரும் நிலையில் கடையம் யூனியனில் இதுவரை நடைமுறைக்கு வராதது ஏமாற்றத்தை அளிப்பதாக சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

மேலும் கணினி முறையில் ரசீது வழங்கப்படும் பல ஊராட்சிகளில் குறைந்த பட்சம் ரசீது ரூ.55க்கு வழங்கப்படும் நிலையில் பல ஊராட்சிகளில் குறைந்த பட்ச வீட்டு வரி தீர்வை கூடுதலாக வசூலிக்கப்படுவதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

இது குறித்து யூனியன் ஆணையாளர் ராஜசேகரனிடம் கேட்டபோது, பல ஆண்டுகளுக்கு முன்பே கம்ப்யூட்டர் மற்றும் பிரிண்டர் வழங்கப்பட்ட நிலையில், செயலர்கள் பலருக்கு கணினி முறையில் ரசீதை அச்சிட்டு வழங்க தொழில் நுட்பம் தெரியாததால் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஒரு சில யூனியனில் செயலர்கள் ஆர்வத்துடன் தெரிந்து கொண்டு தனியாக பயிற்சி பெற்று கணினி முறையில் ரசீதை வழங்கியுள்ளனர். மேலும் அனைத்து ஊராட்சி களிலும் விரைவில் இது நடைமுறைப்படுத்த படவிருக்கிறது.

இந்த நிலையில் விரைவில் ஆன்லைன் மூலம் அனை வரும் வீட்டு வரியை கட்டுவதற்கு அரசு நடை முறைப்படுத்த உள்ளது.இதற்கான முன்னேற்பாடுகள் தற்போது நடைபெற்று வருகிறது என்று கூறினார் அவர்.

Tags:    

Similar News