உள்ளூர் செய்திகள்

வரப்பு உளுந்து சாகுபடியில் அதிக மகசூல் பெறுவது எப்படி?- வேளாண் உதவி இயக்குனர் சாமிநாதன் விளக்கம்

Published On 2022-12-22 09:39 GMT   |   Update On 2022-12-22 09:39 GMT
  • டிஎஸ்பி உரத்தினை கரைத்து தெளிந்த கரைசலை மேலாக வடிகட்டி கைத்தெளிப்பான் கொண்டு தெளிக்க வேண்டும்.
  • விவசாயிகள் தங்கள் வரப்பு உளுந்து சாகுபடியில் கூடுதல் கவனம் வைத்து அதிக மகசூல் அடைய வேண்டும்.

திருத்துறைப்பூண்டி:

திருத்துறைப்பூண்டி வேளாண்மை உதவி இயக்குனர் சாமிநாதன் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது :-

திருத்துறைப்பூண்டி வட்டாரத்தில் சம்பா தாளடி சாகுபடி செய்யப்பட்டுள்ள வயல் வரப்புகளில் பெருமளவில் உளுந்து சாகுபடி உள்ளது.

இவ்வாண்டு குறிப்பிட்ட இடைவெளியில் சீராக வடகிழக்கு பருவமழை கிடைப்பதால் வரப்பில் சாகுபடி செய்யப்பட்டுள்ள உளுந்து நன்கு செழித்து வளர்ந்து உள்ளது. தற்போது பூக்கும் தருணத்தில் உள்ளது.

ஆடுதுறை 5 வம்பன் 8 முதலிய இடங்களில் பயிரிடப்பட்டுள்ளன வரப்புகளில் உளுந்து சாகுபடி செய்வதால் கூடுதல் வருமானமும் இயற்கை முறையில் நெல் வயலில் தீமை செய்யும் பூச்சிகளை கட்டுப்படுத்த முடிகிறது.

2 சதவீதம் டிஏபி கரைசல் 20 லிட்டர் தண்ணீரில் நாலு கிலோ டிஎஸ்பி உரத்தினை கரைத்து 24 மணி நேரம் ஊற வைத்து பிறகு தெளிந்த கரைசலை மேலாக வடிகட்டி எடுத்து அத்துடன் 180 லிட்டர் தண்ணீர் கலந்து மாலை நேரத்தில் கைதெளிப்பான் கொண்டு தெளிக்க வேண்டும்.

பயிர் வகை நுண்ணுட்டம் இரண்டு கிலோ 100 லிட்டர் தண்ணீர் கலந்து மாலை நேரத்தில் தெளிக்க வேண்டும் பஞ்சகவ்யா பசு மாட்டின் சாணம் கோமியம் பால்,நெய் தயிர் முதலியவற்றை கொண்டு தயாரிக்கப்படும் நொதி கரைசல் பஞ்சகாவியம் ஆகும் .

இப் பஞ்சகாவியத்தினை ஒரு டேங்க்கு 300 மில்லி வீதம் கலந்து தெளிக்க வேண்டும். உயிர் உரங்கள் ரைசோபியம், பாஸ்போ பாக்டீரியா, பொட்டாஸ் பாக்டீரியா மூன்றையும் தலா 250 மில்லி கலந்து இந்த கரைசலை டேங்குக்கு 100 மில்லி வீதம் கலந்து தெளிக்க வேண்டும்.

உளுந்து சாகுபடிகள் மூலம் கூடுதல் வருமானம் புரதச்சத்து உள்ள உணவு கிடைப்பதுடன் கால்நடைகளுக்கு உளுந்து தட்டை தீவனமாக பயன்படுகிறது. எனவே விவசாயிகள் தங்கள் வரப்பு உளுந்து சாகுபடியில் கூடுதல் கவனம் வைத்து அதிக மகசூல் அடைய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News