உள்ளூர் செய்திகள்

கோவையில் வீடுகளில் தேசியக் கொடி ஏற்றி மரியாதை செலுத்த வேண்டும்-மக்களுக்கு கலெக்டர் வேண்டுகோள்

Published On 2022-08-10 09:19 GMT   |   Update On 2022-08-10 09:19 GMT
  • நாட்டின் 75-வது சுதந்திர திருநாள் அமுதப் பெருவிழா தேசிய அளவிலும், மாநில அளவிலும் சிறப்பான வகையில் நடத்தப்பட்டு வருகிறது
  • ஆகஸ்டு 13-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

கோவை:

75-வது ஆண்டு சுதந்திர தின அமுதப் பெருவிழாவை முன்னிட்டு ஆகஸ்டு 13-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை வீடுகளில் தேசியக் கொடி ஏற்றி மரியாதை செலுத்த பொது மக்களுக்கு கலெக்டர் சமீரன் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

நாட்டின் 75-வது சுதந்திர திருநாள் அமுதப் பெருவிழா தேசிய அளவிலும், மாநில அளவிலும் சிறப்பான வகையில் நடத்தப்பட்டு வருகிறது. இந்த விழாவினை மேலும் சிறப்பாக கொண்டாடும் வகையில் மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஒன்றியம், ஊராட்சிகளிலுள்ள அனைத்து வீடுகளிலும், வணிக நிறுவனங்களும் ஆகஸ்டு 13-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

வீடுகள், வணிக நிறுவனங்களில் தேசியக் கொடி ஏற்றிய பிறகு அதனைப் பாதுகாப்பாக பராமரிக்க வேண்டும். தேசியக் கொடியின் புனிதத் தன்மைக்கு எந்தவித அவமரியாதையும் நிகழாமல் கையாளுதல் வேண்டும்.

தேசியக் கொடியை திறந்தவெளியிலோ, குப்பைத்தொட்டியிலோ, வயல்வெளிகளிலோ ஏற்றக் கூடாது. 75-வது சுதந்திர தின அமுதப் பெருவிழாவை கொண்டாடும் வகையில் பொது மக்கள் அனைவரும் வீடுகள், வணிக நிறுவனங்களில் தேசியக் கொடியேற்றி சிறப்பிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Tags:    

Similar News