கடலூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 36 பேருக்கு கொரோனா தொற்று
- கடலூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 36 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
- கொரோனா பரவலை தடுக்க பொதுமக்கள் சமூக இடைவெளியை கடை பிடித்து முககவசம் அணிய வேண்டும் என்று சுகாதாரத்துறை வலியுறுத்தி உள்ளது.
கடலூர்:
தமிழகம் முழுவதும் தற்போது கொரோனா தாக்கம் மீண்டும் தலைதூக்கி உள்ளது. இதனால் சென்னை மாநாகராட்சி சார்பில் முககவசம் அணிய வேண்டும் என்று பொது மக்களுக்கு உத்தர–விடப் பட்டுள்ளது. முக–கவசம் அணியாதவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படுகிறது.
கொரோனா பரவலை தடுக்க பொதுமக்கள் சமூக இடைவெளியை கடை பிடித்து முககவசம் அணிய வேண்டும் என்று சுகாதாரத் துறை வலியுறுத்தி உள்ளது.
அதன்படி மாவட்டம் முழுவதும் கொரோனா தொற்றுபற்றி விழிப்புணர்வு ஏற்படுபத்தப்பட்டு வருகிறது. என்றாலும் கடலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. கடந்த 1-ந் தேதி 13 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டது.
அதனைத்தொடர்ந்து கடலூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்தபடி உள்ளது. நேற்று மட்டும் ஒரே நாளில் 36 பேருக்கு கொரோனா அறிகுறி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து அவர்கள் தனிமைபடுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இதுவரை 112 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடலூர் மாவட்டத்தில் கொரோனா வேகமாக பரவுவதையொட்டி மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரத்துறை உஷார் படுத்தப்பட்டுள்ளது. சுகாதாரத்துறையினர் சுகாதார பணியினை முடுக்கிவிட்டுள்ளனர்.
மேலும் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ள உத்தரவில் பொது இடங்களில் மற்றும் மக்கள் கூடும் இடங்களில் சமூக இடைவெளி விட்டு, முககவசம் அணிந்து செல்லவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.