உள்ளூர் செய்திகள்

கடலூரில் பரபரப்பு கை குழந்தையுடன் ஓடும் பஸ்சில்ரகளையில் ஈடுபட்ட இளம்பெண்: பயணிகள் போலீசில்ஒப்படைத்தனர்

Published On 2023-07-13 07:59 GMT   |   Update On 2023-07-13 07:59 GMT
  • 2 வயது குழந்தையு டன் வந்த இளம் பெண் ஒருவர் பஸ்சில் ஏறினார்
  • கண்டக்டர் சொல்வதை ஏதும் கேட்காமல் தகராறு செய்து கொண்டே பஸ்சில் வந்து கொண்டி ருந்தார் .

கடலூர்:

கடலூரில் இருந்து நேற்று மாலை 4.10 மணி அளவில் சேலத்தில் இருந்து புதுவைக்கு அரசு பஸ் வந்தது. அந்த பஸ்சில் ஏறக்குறைய 20-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர். இந்த பஸ் கடலூர் செம்மண்டலத்துக்கு வந்த போது 2 வயது குழந்தையு டன் வந்த இளம் பெண் ஒருவர் பஸ்சில் ஏறினார். அவருக்கு கண்டக்டர் சீட்டு கொடுத்தார். ஆனால் அந்த பஸ் கடலூர் கலெக்டர் அலுவ லகத்தை தாண்டியதும் அந்த பெண் எதிர் சீட்டில் வாலிபருடன் உட்கார்ந்து இருந்த இளம்பெண்ணிடம் செல்போனை வாங்கி பேசினார். போன் பேசி முடித்து அந்த பெண்ணி டம் செல்போனை கொடுத்து விட்டார் .அதற்கு பிறகு அவர் நீங்கள் என்ன காதல் ஜோடிகளா என்று கேட்டார் .நீங்கள் காதல் ஜோடிகளாக இருந்தால் உருப்பட மாட்டீர்கள் என்று திரும்பத் திரும்ப சொன்னார். ஆனால் இதற்கு பதிலாக இளம் பெண் எந்த வார்த்தையும் சொல்லவில்லை. குழந்தை உடன் வந்த இளம் பெண் அவர்கள் இருவரையும் பார்த்து நாகரிகம் அற்ற முறையில் ஆபாசமாக திட்ட தொடங்கி விட்டார்.

இதை பார்த்த பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து பஸ் கண்டக்டரிடம் தெரிவித்தனர். அவரும் பஸ் டிக்கெட்டை என்னிடம் கொடுத்து விட்டு இறங்கி விடுங்கள் என்றார். ஆனால் அந்த பெண் டிக்கெட் டை கண்டக்டரிடம் கொடு க்காமல் வாக்குவாதம் செய்தார். எனக்கு ரூ. 20 செலவானாலும் பரவாயில்லை. நீங்கள் இந்த இடத்தில் இறங்கிக் கொள்ளுங்கள் என்று கண்டக்டர் கூறினார் ஆனாலும் அந்த பெண் கண்டக்டர் சொல்வதை ஏதும் கேட்காமல் தகராறு செய்து கொண்டே பஸ்சில் வந்து கொண்டி ருந்தார் .

இந்த பஸ் கடலூர் ஆல் பேட்டை சோதனை சாவடி அருகே வந்தது. அப் போது அந்த பெண்ணிடம் மீண்டும் கண்டக்டர் இந்த இடத்தில் இறங்கி கொள்ளுங்கள் என்றார். ஆனாலும் அந்தப் பெண் மீண்டும் எதிர் சீட்டில் உட்கார்ந்து இருந்த இளம் பெண்ணை பார்த்து கடுமையாகஆபாச வார்த்தைகளால் பேசினார். இதனால் பஸ் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். ஆல்பேட்டை சோதனை சாவடி வந்ததும் ரகளை செய்த பெண்ணை கீழே இறங்குமாறு கூறினார். ஆனாலும் அவர் இறங்க மறுத்தார். அப் பெண்ணின் குழந்தை அழுது கொண்டே இருந்தது. கண்டக்டர் எவ்வளவோ முயற்சி செய்தும் அந்தப் பெண் இறங்கவில்லை. அந்தப் பஸ்ஸில் இருந்த ஒரு பணியிடம் நீங்களும் போலீஸ் தானே என்னை காப்பாற்றுங்கள் என்றார். அவர் எதுவும் ெசால்ல வில்லை. உடனடியாக ஒரு பயணி சோதனை சாவடியில் இருந்த ஒரு போலீசாரை அழைத்தார். அவரும் வந்தார் .அவரிடமும் அந்தப் பெண் தகராறு செய்தார். இந்த நிலையில் பஸ்சில் இருந்த பயணிகள் அனைவரும் அந்த பெண்ணை கீழே இறக்கி விட்டு செல்லுங்கள் என்று கண்டக்டரிடம் கூறினர்.

இந்த நிலையில் பெண் போலீஸ் ஒருவர் வந்தார் அவரிடமும் அந்த பெண் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ரகளையில் ஈடுபட்ட பெண்ணின் குழந்தை அழுது கொண்டே இருந்தது. அதையும் பொருட்படுத்தாமல் அந்தப் பெண், பெண் போலீசாரிடம் ரகளையில் ஈடுபட்டார். அப்போது எல்லா பயணிகளும் அந்தப் பெண்ணுக்கு எதிராக புகார் கூறினா ர்கள். ஆனாலும் அந்த பெண் எதுவும் ஏற்றுக் கொ ள்ளா மல் ஏற்றுக்கொ ள்ளாமல் மீண்டும் தகராறில் ஈடுபட்டார். திடீரென பெண் போலீஸ் ரகளையில் ஈடுபட்ட பெண்ணை அழகாக தூக்கி கீழே இறக்கி விட்டார். மேலும் அந்தப் பெண்ணிடம் வந்த குழந்தையும் இறக்கி விட்டார். அந்த பெண் போதையில் வந்தாரா இல்லை கஞ்சா அடித்து விட்டு வந்தாரா என்பது தெரியவில்லை. இந்த சம்பவத்தால் சுமார் 10 நிமிடம் தாமதமாக அரசு பஸ் புறப்பட்டு சென்றது.

Tags:    

Similar News