தருமபுரியில் ஒரே நாளில் 10 பேருக்கு கொரோனா
- கொரோனாவால் பாதிக்கப்பட்ட மொத்தம் 26 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
- பொதுமக்கள் வெளியில் செல்லும் போது முககவசம் அணிய வேண்டும்.
தருமபுரி,
தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னை, செங்கல்பட்டு, கோயம்புத்தூர், கன்னி யாகுமரி, ராணிபேட்டை, சேலம், திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கொேரானா பாதிப்பு அதிகம் உள்ளது.
தருமபுரியில் தற்போது கொரோனாவின் தாக்கம் வேகமெடுத்து வருகிறது. கடந்த சில தினங்களாக குறைவாக இருந்த கொரோனா பாதிப்பு தற்போது அதிகரித்துள்ளது.
அதனால் பொதுமக்கள் வெளியில் செல்லும் போது முககவசம் அணிய வேண்டும். அவ்வாறு அணிந்தால் கொரோனா பரவலை தடுக்க முடியும்.
வெளியில் சென்று விட்டு வீட்டிற்கு வந்த உடன் கைகளை ேசாப்பு போட்டு நன்கு கழுவ வேண்டும். அவ்வாறு கழுவினால் நோய் தொற்றை பரவாமல் தடுக்கலாம்.
தருமபுரி நேற்று மட்டும் 10 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவர்களை வீடு மற்றும் மருத்துவமனைகளில் மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.
கொரோனாவால் பாதிக்கப்பட்ட மொத்தம் 26 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நேற்று 6 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர்.
இதே போல் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று 2 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனா பாதித்த 28 பேர் வீடு, மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.