உள்ளூர் செய்திகள்

சாலையில் குவிந்து கிடக்கும் குப்பையை படத்தில் காணலாம்.

கடத்தூர் பேரூராட்சியில் பள்ளிக்கு செல்லும் பகுதியில் குவிந்து கிடக்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு

Published On 2022-08-17 09:54 GMT   |   Update On 2022-08-17 09:54 GMT
  • குவிந்துள்ள குப்பைகளை அகற்றாமல் உள்ளதால் அந்த வழியாக சென்று வரும் அனைவரும் பெரும் அவதிக்கும், சிரமத்திற்கும் உள்ளாகி வருகின்றனர்.
  • இந்த குப்பைகளை அகற்ற பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடத்தூர்,

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா கடத்தூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள போலீஸ் ஸ்டேசன் வழியில் தினமும் அரசு பள்ளிக்கு செல்லும் மாணவ மாணவிகள் பல நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் மற்றும் பொதுமக்கள் சென்று வருகின்றனர்.

இந்த நிலையில் போலீஸ் ஸ்டேஷன் காம்பவுண்ட் அருகில் பல நாட்களாக கொட்டப்பட்டு குவிந்துள்ள குப்பைகளை அகற்றாமல் உள்ளதால் அந்த வழியாக சென்று வரும் அனைவரும் பெரும் அவதிக்கும், சிரமத்திற்கும் உள்ளாகி வருகின்றனர்.

எனவே சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. ஆகவே இந்த குப்பைகளை அகற்ற பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News