உள்ளூர் செய்திகள்

கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை முன்பு சாலை மறியல் ஈடுபட்டவர்களுடன் துணை போலிஸ் சூப்பிரண்டு ராஜலட்சுமி பேச்சுவார்த்தை நடத்தினார்.

கள்ளக்குறிச்சியில் மாணவியின் உடலை வாங்க மறுத்து 3-வது நாளாக போராட்டம்

Published On 2022-07-15 08:28 GMT   |   Update On 2022-07-15 08:28 GMT
  • கள்ளக்குறிச்சியில் மாணவியின் உடலை வாங்க மறுத்து 3-வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
  • சாலை மறியல் போராட்டத்தால் அரை மணி நேரம்போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

கள்ளக்குறிச்சி:

கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகில் உள்ள பெரியநெசலூர் கிராம த்தைசேர்ந்த ராமலிங்கம் மகள் ஸ்ரீமதி (16), இவர்க ள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கணியாமூரில் உள்ள ஒருதனியார் பள்ளி விடுதியில் தங்கி பிளஸ்-2 படித்து வந்தார்.

நேற்று முன்தினம் அதிகாலை மாணவி ஸ்ரீமதி விடுதியின் 3-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலைசெய்து கொ ண்டதாக கூறப்படுகிறது. இறந்த மாணவியின் உடல் மருத்துவ பரிசோ தனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

இந்நி லையில் மாணவியின் பெற்றோர்கள் தனது மகள் சாவில் சந்தேகம் உள்ளதாக கூறி நேற்று முன்தினம் தனியார் பள்ளி எதிரே சாலை மறியலில் ஈடுபட்டனர். போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படும் விதமாக மறியலில் ஈடுபட்டதால் போலீசார் லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.

இந்நிலையில் நேற்று இறந்துபோன மாணவி விருத்தாசலம் தொகுதிக்குஉட்பட்டவர் என்பதால் தகவல் அறிந்ததும் விருத்தாசலம் எம்.எல்.ஏ. ராதாகிருஷ்ணன், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாவட்ட தலைவர் இளையராஜா மற்றும் நிர்வாகிகள் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று மாணவியின் பெற்றோ ர்களுக்கு ஆறுதல் கூறினர். அதனை தொடர்ந்து எம்.எல்.ஏ. ராதாகிருஷ்ணன் கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதரை நேரில் சந்தித்து தனியார் பள்ளியில் மர்மமான உயிரிழந்த மாணவியின் இறப்புக்கு நியாயமானமுறையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு அளித்தார். மனுவை பெற்று க்கொண்ட மாவட்ட கலெக்டர் பிரேத பரிசோதனை முடிவை பொறுத்து உரிய முறையில் நடவடிக்கை எடுப்பதாகஉறுதியளித்தார்.

இந்நிலையில் மாணவியின் இறப்பில் சந்தேகம் உள்ளது என கூறிபள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சடலத்தை வாங்க மறுத்து மாணவியின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை முன்பு சாலை மறியல் போரா ட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அந்த பகுதியி ல்பரபரப்பு ஏற்பட்டது. அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜலட்சுமி மற்றும் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமாதானம் செய்து உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.

அதனை ஏற்றுக்கொண்டு சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சாலை மறியல் போராட்டத்தால் அரை மணி நேரம்போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இந்நிலையில் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வைக்க ப்பட்டிருந்த மாணவியின் உடல் நேற்று மாலை பிரேத பரிசோதனை நிறை வடைந்தது. இருப்பினும் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் பிரேத பரிசோதனை முடிவு தெரியும் வரை மாணவியின் உடலை வாங்கமாட்டோம் எனக் கூறி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவம் கள்ளக்குறிச்சி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Tags:    

Similar News