உள்ளூர் செய்திகள்

கோத்தகிரியில் பொரங்காடு சீமை படுகர் நல சங்க நிர்வாகிகள் கூட்டம்

Published On 2022-09-04 09:48 GMT   |   Update On 2022-09-04 09:48 GMT
  • பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது
  • இயற்கையை வலியுறுத்தி விழிப்புணர்வு மாரத்தான்.

அரவேணு

கோத்தகிரி ராம்சந்த் பகுதியில் பொரங்காடு சீமை படுகர் நல சங்க நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது கூட்டத்திற்கு சங்கத் தலைவர் தியாகராஜன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் கோபாலகிருஷ்ணன், ஹரிச்சந்திரன் செயலாளர் ரவி முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் ஏக மனதாக நிறைவேற்றப்பட்டன. வருகிற 1-ந் தேதி இயற்கையை வலியுறுத்தி விழிப்புணர்வு மாரத்தான் மற்றும் படுக அகராதி வெளியீட்டு விழாவை சிறப்பாக நடத்துவது .

மேலும் தேயிலைக்கு குறைந்த பட்சம் ரூபாய் 30 விலை நிர்ணயம் குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது விவசாயி நிலங்களை சீரழித்து வரும் பன்றிகளை சுட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில் பொருளாளர் சிவசுப்பிரமணி, நிர்வாகி ராமச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News