உள்ளூர் செய்திகள்

பஸ்சுக்காக பல மணி நேரம் காத்திருக்கும் மாணவ-மாணவிகள்.

மதுக்கூரில், பஸ்சுக்காக நீண்ட நேரம் காத்திருக்கும் மாணவர்கள்

Published On 2022-12-13 09:12 GMT   |   Update On 2022-12-13 09:12 GMT
  • இரண்டு பள்ளிகளில் 5000-க்கும் மேற்பட்ட மாணவ-மாண–விகள் படித்து வருகின்றனர்.
  • சில பஸ்சில் கூட்ட நெரிசல் இருப்பதால் தொங்கியடி செல்லும் நிலை உள்ளது.

மதுக்கூர்:

தஞ்சாவூர் மாவட்டம் மதுக்கூரில் ஆண்கள் அரசு மேல்நிலைப்பள்ளி, அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி என 2 அரசு பள்ளிகள் உள்ளது.

இந்த இரண்டு பள்ளிகளில் 5000-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.

மதுக்கூர் மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் இருந்து பள்ளிக்கு வந்து செல்கின்றனர்.

ஆனால் பள்ளி தொடங்கும் காலை மற்றும் முடியும் மாலை நேரங்களில் மதுக்கூருக்கு போதிய பஸ் வசதி இல்லாததால் மாணவ-மாணவிகள் அவதியடைந்து வருகின்றனர்.

இதனால் சில பஸ்சில் கூட்ட நெரிசல் இருப்பதால் தொங்கியடி செல்லும் நிலை உள்ளது.

இது குறித்து காவி புலிப்படை நிறுவன தலைவர் புலவஞ்சி சி.பி.போஸ் கூறியதாவது:-

மதுக்கூரில் உள்ள 2 அரசு பள்ளிகளிலும் ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.

இவர்களில் பெரும்பாலானோர் பஸ்களில் வருகின்றனர். ஆனால் காலை மற்றும் மாலை நேரங்களில் குறைவான எண்ணிக்கையிலேயே பஸ்கள் இயக்கப்படுகின்றன.

இதனால் பஸ்சுக்காக காத்திருக்கும் நிலை ஏற்படுவதோடு படிக்கட்டில் தொங்கியடி செல்லும் நிலையும் உள்ளது.

இது போன்ற சூழ்நிலையில் மதுக்கூர் காவலர்களுக்கு கூடுதல் சுமை ஏற்படுகிறது. எனவே மாணவ-மாணவிகளின் நலனை கருத்தில் கொண்டு காலை மற்றும் மாலை நேரங்களில் மதுக்கூருக்கு கூடுதல் பஸ் வசதி செய்து தர வேண்டும் என்றார்.

Tags:    

Similar News