சேலம், நாமக்கலில் ஒரே நாளில் 114 பேருக்கு கொரோனா பாதிப்பு
- நேற்று முன்தினம் 86 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர்.
- இதுவரை இந்த மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்–பட்டவர்களின் எண்ணிக்கை 68,517 ஆக உயர்ந்துள்ளது.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு சற்று குறைந்து வருகிறது. நேற்று முன்தினம் 86 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர்.
77 பேருக்கு கொரோனா பாதிப்பு
இந்த நிலையில், நேற்று புதிதாக 77 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது பரிசோதனையில் தெரியவந்தது.
இவர்கள் அரசு ஆஸ்பத்திரிகளில் அனும–திக்–கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அதே நேரத்தில், கொரோனா–வுக்கு சிகிச்சை பெற்று வந்த 53 பேர் குணமடைந்து விட்டதால் நேற்று அவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்–பட்டனர். மாவட்டத்தில் நோய் தொற்றுக்கு 520 பேர் தொ டர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நாமக்கல்
நாமக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் 37 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. நேற்று மட்டும் 26 பேர் குணமாகி வீடு திரும்பி உள்ளனர். இதுவரை இந்த மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்–பட்டவர்களின் எண்ணிக்கை 68,517 ஆக உயர்ந்துள்ளது.
இவர்களில் 67,789 பேர் சிகிச்சை பெற்று குணமாகி வீடு திரும்பி உள்ளனர். 534 பேர் இறந்துவிட்ட நிலையில் மீதமுள்ள 194 பேரில் பலர் வீடுகளில் தனிமைப்படுத்தி கொண்டும், சிலர் ஆஸ்பத்திரிகளில் அனும–திக்கப்பட்டும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.