சேலம், நாமக்கல் மாவட்டத்தில் 100 டிகிரியை தாண்டிய வெயில்
- சேலம் மாவட்டத்தை பொறுத்தவரை அதிகாலையில் குளிர், சூரிய உதயத்திற்கு பிறகு கடும் வெயில் என்று மாறுபட்ட சீதோஷ்ணம் நிலவி வருகிறது.
- இந்நிலையில் நேற்று 100 டிகிரிக்கு மேல் வெயில் கொளுத்தியது. இதனால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.
சேலம்:
சேலம், நாமக்கல்லில் கடந்த 2 நாட்களில் 100 டிகிரிக்கு மேல் வெயில் கொளுத்தியதால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.
தமிழகத்தில் ஏப்ரல், மே மாதங்கள் முழுமையான கோடை காலமாக இருக்கும். ஆனால் நடப்பாண்டில் ஏப்ரல் துவங்கும் முன்பே, கடும் வெயில் கொளுத்தி வருகிறது.
இதில் சேலம் மாவட்டத்தை பொறுத்தவரை அதிகாலையில் குளிர், சூரிய உதயத்திற்கு பிறகு கடும் வெயில் என்று மாறுபட்ட சீதோஷ்ணம் நிலவி வருகிறது.
இந்நிலையில் நேற்று 100 டிகிரிக்கு மேல் வெயில் கொளுத்தியது. இதனால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.
நேற்று முன்தினம் சேலம் மாவட்டத்தில் 98 டிகிரி பதிவான நிலையில், நேற்று 100.6 டிகிரி வெயில் பதிவானது. அதே நேரத்தில் நாமக்கல்லில் நேற்று முன்தினம் 100.4 டிகிரி வெயில் பதிவான நிலையில், நேற்று 98.6 வெயில் பதிவானது.
கடந்த 2 நாட்களில் 2 மாவட்டங்களிலும் வெயில் உச்சம் தொட்டுள்ளது. இந்த வெயிலால் வாகன ஓட்டிகள், தள்ளு வண்டி கடை உரிமையாளர்கள், சாலையோர வியாபாரிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். இதனால் இளநீர், கூல்டிரிங் கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. நேற்று இரவு வீடுகளில் புழுக்கம் அதிகமாக காணப்பட்டது.