உள்ளூர் செய்திகள்

3 மணி நேரம் இடைவிடாமல் சிலம்பம் சுற்றிய மாணவ -மாணவிகள்.

தஞ்சையில், 3 மணி நேரம் சிலம்பம் சுற்றி மாணவர்கள் அசத்தல்

Published On 2023-11-05 10:06 GMT   |   Update On 2023-11-05 10:06 GMT
  • காலை 8.30 மணிக்கு தொடங்கிய சிலம்பம் 11.30 மணி வரை இடைவிடாமல் சுற்றினர்.
  • இந்த சாதனை நோபல் வேர்ல்ட் ரெக்கார்டில் இடம் பிடித்தது.

தஞ்சாவூர்:

தஞ்சாவூர் நவ பாரத் மெட்ரிக் பள்ளி விளை யாட்டு மைதானத்தில் இன்று குழந்தைகள், பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு குறித்து தொடர்ந்து 3 மணி நேரம் இடைவிடாமல் சிலம்பம் சுற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை ஸ்டார் குளோபல் இன்டர்நேஷனல் சார்ட்டபிள் டிரஸ்ட் தலைவர் முகமது சாபீர் ஒருங்கிணைத்தார்.

இதில் 400-க்கும் மேற்பட்ட மாணவ- மாண விகள் கலந்து கொண்டு இடைவிடாமல் 3 மணி நேரம் சிலம்பம் சுற்றி அசத்தினர். காலை 8.30 மணிக்கு தொடங்கிய சிலம்பம் 11.30 மணி வரை இடைவிடாமல் சுற்றினர்.

இந்த சாதனை நோபல் வேர்ல்ட் ரெக்கார்டில் இடம் பிடித்தது. சிலம்பம் சுற்றியவர்களை மாநகராட்சி மேயர் சண் ராமநாதன் பாராட்டினார்.

மேலும் அவர் சாதனை படைத்த தற்கான நோபல் வேர்ல்ட் ரெக்கார்ட் சான்றிதழ்களை மாணவ -மாணவிகளுக்கு வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் நவ பாரத் மெட்ரிக் பள்ளி பிரின்சிபல் ஜான்சன், அட்மினேஸ்டர் குணாசிங், நோபல் வேர்ல்ட் ரெக்கார்ட் சீப் ஆப்பரேட்டிங் ஆபிஸர் வினோத், தீர்ப்பாளர் பரத் குமார், கேரளா யு.எஸ்.எம்.ஏ. கிராண்ட் மாஸ்டர் குங் நியாஸ், பொதுச் செயலாளர் மார்க்கர், ஏ.ஐ.கே.ஏ. துணைத் தலைவர் ரெனால்ட் சுகுமாரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News