தஞ்சை மாவட்டத்தில், பிளஸ்-2 தேர்வு மையங்களில் கலெக்டர் ஆய்வு
- மொத்தம் 112 மையங்களில் தேர்வு நடைபெற்றது.
- தேர்வு தொடங்கிய முதல் 15 நிமிடம் வினாத்தாளை வாசித்து பார்க்க நேரம் ஒதுக்கப்பட்டது.
தஞ்சாவூர்:
தமிழகத்தில் 2022-23-ம் கல்வி ஆண்டிற்கான பிளஸ் -2 பொதுத்தோ்வு இன்று தொடங்கியது.
அடுத்த மாதம் 3 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
தஞ்சாவூா் மாவட்டத்தில் நிகழாண்டு 225 அரசு, அரசு உதவி பெறும், தனியாா் பள்ளிகளைச் சோ்ந்த 29 ஆயிரத்து 888 மாணவ- மாணவிகளுக்கு பிளஸ் -2 பொதுத்தேர்வு எழுதுவதற்கான ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்து வைத்திருந்தனர்.
இவா்களில் 14 ஆயிரத்து 641 மாணவா்களும், 15 ஆயிரத்து 247 மாணவிகளும் அடங்கும்.
281 மாற்றுத்திறனாளி மாணவர்களும் தேர்வு எழுத வசதியாக அவர்களுக்கு தரை தளத்தில் தேர்வு அறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. மொத்தம் 112 மையங்களில் தேர்வு நடைபெற்றது.
இன்று காலை மாணவ- மாணவிகள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தேர்வு மையங்களுக்கு வந்தனர்.
முன்னதாக மாணவ- மாணவிகள் தேர்வில் தேர்ச்சி பெற்று நல்ல மதிப்பெண் எடுக்க வேண்டும் என்று வழிபாட்டு தலங்களில் பிரார்த்தனை செய்தனர்.காலை 10 மணிக்கு தேர்வு தொடங்கியது.
மாணவர்கள் தீவிர பரிசோதனைக்கு பிறகே அறைக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
செல்போன், கால்கு லேட்டர் எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டது. தேர்வு தொடங்கிய முதல் 15 நிமிடம் வினாத்தாளை வாசித்து பார்க்க நேரம் ஒதுக்கப்பட்டது.
அதன் பின்னர் மாணவர்கள் தேர்வு எழுதத் தொடங்கினர். மதியம் 1.15 மணி வரை தேர்வு நடைபெற்றது.
இது தவிர உடல் ஊனமுற்றோர், கண் பார்வை யற்றோர், காது கேளாத வாய் பேச இயலாதோர், டிஸ்லெக்சியா மற்றும் மனவர்த்திக்கொன்றிய மாணவர்களுக்கு கூடுதலாக ஒரு மணி நேரம் ஒதுக்கப்பட்டது.
இத்தோ்வில் முறைகே டுகள் நடைபெறுவதைத் தடுக்கும் வகையில் பறக்கும் படைகள் அமைக்கப்ப ட்டுள்ளன.
இப்பணிகளில் பறக்கும் படையினா், கண்காணிப்பாளா்கள், அறை கண்காணிப்பாளா்கள் என சுமார் 2 ஆயிரம் ஆசிரியா்களும், ஆசிரியா் அல்லாத கல்வித் துறைப் பணியாளா்களும் ஈடுபடுத்தப்பட்டனர்.
அவர்கள் தேர்வு மையங்களில் சென்று ஆய்வு செய்தனர்.
தேர்வை முன்னிட்டு மாவட்டத்திலுள்ள அனைத்து மையங்களில் குடிநீா் வசதி, தடையில்லா மின்சாரம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது.