தஞ்சையில், தொடர் இரு சக்கர வாகன திருட்டில் ஈடுபட்டவர்கள் கைது
- சி.சி.டி.வி காமிராக்களில் பதிவான காட்சிகளை கொண்டு குற்ற–வாளிகளை தேடி வந்தனர்.
- 38 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
தஞ்சாவூர்:
தஞ்சை மாநகரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் அடிக்கடி இருசக்கர வாகனங்கள் திருட்டு நடைபெற்று வந்தன. இது தொடர்பாக ஏராளமான புகார்கள் வந்தன.
இதையடுத்து குற்றவாளிகளை கைது செய்ய தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரவளிபிரியா உத்தரவிட்டார்.
இதையடுத்து தஞ்சை நகர துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜா தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகள் தேடப்பட்டு வந்தனர். இந்த தனிப் படையில் போலீஸ்
சப்-இன்ஸ்பெக்டர் ராஜ்கமல், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மோகன், போலீஸ்காரர்கள் புகழேந்தி, திருக்குமரன், கோதண்டம் ஆகியோர் இடம் பெற்று இருந்தனர்.
இந்த தனிப்டையினர் மோட்டார் சைக்கிள்கள் திருட்டு போன இடங்களில் உள்ள கண்காணிப்பு காமிராக்களில் பதிவான காட்சிகளை கொண்டு குற்றவாளிகளை தேடி வந்தனர்.
இந்நிலையில், தொடர் வாகனத் திருட்டில் ஈடுபட்ட தஞ்சையை சேர்ந்த ராஜ் (வயது 29), ஆனந்த் (31), கோபிநாத் (19), பிரகலாதன் (19) ஆகிய 4 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர்.
மேலும் கைது செய்யப்–பட்டவர்களிடம் இருந்து 38 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களின் மதிப்பு ரூ.20 லட்சம் ஆகும்.
கைது செய்யப்பட்ட 4 பேரையும் தஞ்சை மேற்கு போலீசில் ஒப்படைத்தனர்.
அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சந்திரா வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்ட 4 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.