உள்ளூர் செய்திகள்
பாப்பிரெட்டிப்பட்டியில் பெண் மாயம்
- சம்பவத்தன்று இவருக்கு அவரது மாமியாருக்கு இடையே தகராறு ஏற்பட்டது.
- மனவிரக்தியில் இருந்த சத்யா நேற்று வீட்டை விட்டு மாயமானார்.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி காமராஜ் நகரைச் சேர்ந்தவர் சுப்ரமணிய சிவா. இவரது மனைவி சத்யா (வயது33). சம்பவத்தன்று இவருக்கு அவரது மாமியாருக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் மனவிரக்தியில் இருந்த சத்யா நேற்று வீட்டை விட்டு வெளியே சென்றார். பின்னர் அவர் மீண்டும் வீடு திரும்பி வரவில்லை. இதனால் பதறிப்போன கணவர் சுப்ரமணியசிவா, தனது மனைவி பல இடங்களில் தேடிபார்த்தார். எங்கும் தேடியும் அவர் கிடைக்காததால், சத்யா மாயமானது தெரியவந்தது.
இதுகுறித்து அவர் பாப்பிரெட்டிப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான சத்யாவை தீவிரமாக தேடிவருகின்றனர்.