திருத்துறைப்பூண்டியில், விவசாயிகள் சாலை மறியல்
- பைபாஸ் சாலையில் பொதுமக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.
- கால்நடைகளை வீட்டில் கட்டி வைத்து வளர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திருத்துறைப்பூண்டி:
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் பல்வேறு இடங்களில் விவசாயிகள் நெற்பயிர்கள் மற்றும் தானிய வகை பயிர்களை விளைவித்து வருகின்றனர்.
இந்நிலையில் அங்கு பயிரிடப்பட்டுள்ள பயிர்களை கால்நடைகள் சேதப்படுத்தி வந்தன.
இதனால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.
இந்நிலையில் இன்று காலை வயல் பகுதிகளில் மேய்ந்த கால்நடைகளை பிடித்து கொண்டு விவசாயிகள் திருத்துறைப்பூண்டி பைபாஸ் சாலையில் திடீரென சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.
இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இது குறித்து தகவல் அறிந்ததும் திருத்துறைப்பூண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கழனியப்பன் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சு வார்த்தை நடத்தினர்.
அப்போது விவசாயிகள் கால்நடைகள் விவசாய பயிர்களை சேதபடுத்தி வருகிறது.
எனவே கால்நடைகளை வீட்டில் கட்டி போட்டு வளர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
இதைத் தொடர்ந்து போலீஸ் தரப்பில் இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டது.
பின்னர் விவசாயிகள் அனைவரும் கலைந்து சென்றனர்.