உள்ளூர் செய்திகள்

திருத்துறைப்பூண்டியில் ஆலோசனை கூட்டம் நடந்தது.

திருத்துறைப்பூண்டியில், ஓராண்டுக்குள் அனைத்து வீடுகளிலும் மாடித்தோட்டம் அமைக்கப்படும்

Published On 2023-05-05 09:23 GMT   |   Update On 2023-05-05 09:23 GMT
  • வீட்டின் மாடி பகுதிகளை குறைந்த செலவில் தோட்டமாக மாற்றலாம்.
  • பாரம்பரிய நாட்டு காய்கறிகள், பழங்கள், கீரைகள், கிழங்குகளை உற்பத்தி செய்யலாம்.

திருத்துறைப்பூண்டி:

திருத்துறைப்பூண்டி நகராட்சி பகுதிகளில் உள்ள மாடி வீடுகளில் இயற்கை முறையில் காய்கறி தோட்டம் அமைப்பது குறித்த ஆலோ சனை கூட்டம் நகர்மன்ற தலைவர் கவிதாபாண்டியன் தலைமையில், ஆணையர் பிரதான் பாபு, பாலம் சேவை நிறுவன செயலாளர் செந்தில்குமார் முன்னிலை யில் நடைபெற்றது.

இயற்கை காய்கறி தோட்ட வல்லுனர் திருச்சி விதை யோகநாதன், தோட்டக லைத்துறை உதவி இயக்குனர் இளவரசன் ஆகியோர் மாடித்தோட்டம் அமைப்பது குறித்து எடுத்துரைத்தனர்.

நகர்மன்ற தலைவர் கவிதாபாண்டியன் பேசுகையில்:-

தற்போது காலநிலை மாற்றத்தால் வெப்பம் அதிகரித்து வருகிறது.

இதனால் வீட்டின் மேல்பகு தியை குளிரவைக்க பல்வேற வழிகள் இருந்தாலும், பசுமைகுடில் அமைப்பது சிறந்தது. வீட்டின் மாடி பகுதிகளை குறைந்த செலவில் தோட்டமாக மாற்றி இயற்கை உரங்களை பயன்படுத்தி பாரம்பரிய நாட்டு காய்கறிகள், பழங்கள், கீரைகள், கிழங்குகளை உற்பத்தி செய்யலாம்.

இதனால் மன அமைதி, நஞ்சில்லாத உணவு, நோயற்ற வாழ்வு, பொருளாதார சேமிப்பு போன்ற நன்மைகள் கிடைக்கிறது.

இதற்காக நகராட்சி நிர்வாகத்துடன் பாலம் சேவை நிறுவனம், பசுமை சிகரம் அமைப்பு ஆகியவை இணைந்து உரிய தொழில்நுட்பங்கள் குறித்து ஆர்வமுள்ளவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்.

மேலும், காய்கறி, விதைகள் வழங்கப்படும். ஓராண்டு க்குள் அனைத்து மாடி வீடுகளிலும் மாடித்தோட்டம் அமைப்பதே இலக்கு என்றார்.

நிகழ்ச்சியில் நகர்மன்ற உறுப்பினர் எழிலரசன் கலந்து கொண்டார்.

Tags:    

Similar News