உள்ளூர் செய்திகள்

செங்குறிச்சி சுங்கச்சாவடி ஊழியர்கள் தலை கீழாக நின்று தண்ணீர் குடிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உளுந்தூர்பேட்டையில் சுங்கச்சாவடி ஊழியர்கள் தலை கீழாக நின்று நூதன போராட்டம்

Published On 2022-11-01 06:56 GMT   |   Update On 2022-11-01 06:56 GMT
  • 28 ஊழியர்கள் தற்காலிக பணி நீக்கம் செய்ததை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
  • இன்று 32-வது நாளாக நீடித்தது.

கள்ளக்குறிச்சி:

உளுந்தூர்பேட்டை செ ங்குத்து சுங்கச்சாவடியில் 28 ஊழியர்கள் தற்காலிக பணி நீக்கம் செய்ததை கண்டித்து தினமும் நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று தலைகீழாக நின்று தண்ணீர்குடிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதுகுறித்து அவர்கள் கூறுகையில் எங்களை உடனடியாக பணியில் சேர்க்க வேண்டும். நாங்கள் 13 ஆண்டுகள் வேலை செய்து இருக்கிறோம். அதற்கான தொகையை செலுத்த வேண்டும் என்றனர்.

இந்த போராட்டம் இன்று 32-வது நாளாக நீடித்தது. அப்போது ஆதிவாசி வேடமிட்டு சுதந்திரம் வாங்கியும் இந்த தமிழகத்தில் நமக்கு ஒரு விடிவு கிடைக்கவில்லை என்ப தை அடையாளப்படுத்தும் விதமாக இந்தப் போராட்டத்தில் ஈடுபட போவதாக தெரிவித்து உள்ளனர்.

Tags:    

Similar News