ஏற்காட்டில் அனுமதியின்றி மரங்கள் வெட்டி கடத்தி சென்ற 2 லாரிகள் சிக்கின
- ஏற்காடு அடிவாரம் வழியாக தினமும் லோடு, லோடாக லாரிகளில் பெரிய பெரிய மரங்கள் சேலத்திற்கு கொண்டு வரப்படுகின்றன. இந்த மரங்கள் ஆலைகளுக்கு கொண்டு செல்லப்படுவதாக கூறப்படுகிறது.
- 2 லாரிகளையும் பிடித்து ஏற்காடு தாசில்தாரிடம் ஒப்படைக்க உத்தரவிட்டார்.
சேலம்:
ஏற்காடு அடிவாரம் வழியாக தினமும் லோடு, லோடாக லாரிகளில் பெரிய பெரிய மரங்கள் சேலத்திற்கு கொண்டு வரப்படுகின்றன. இந்த மரங்கள் ஆலைகளுக்கு கொண்டு செல்லப்படுவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் ஏற்காடு செம்மநத்தம் கிராமத்தில் கலெக்டர் கார்மேகம் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது 2 லாரிகளில் மரங்கள் வெட்டி கொண்டு செல்லப்பட்டது. இதனை கலெக்டர் கார்மேகம் பார்த்து அந்த லாரிகளை நிறுத்தி ஆய்வு செய்தார். அப்போது ஏற்காடு புத்தூர் கிராமத்தில் இருந்து மரங்களை அனுமதியின்றி வெட்டி கடத்திச் செல்லப்பட்டது தெரியவந்தது.
இதையடுத்து 2 லாரிகளையும் பிடித்து ஏற்காடு தாசில்தாரிடம் ஒப்படைக்க உத்தரவிட்டார். பின்னர் ஏற்காடு தாசில்தார் 2 லாரிகளையும் ஏற்காடு வனச்சரக அலுவலரிடம் ஒப்படைத்து, மேல்நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்தார். அதன்பேரில் வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மரங்கள் கடத்தலை தடுக்க ஏற்காடு அடிவாரத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர், வருவாய் இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் தலைமையிலான குழு அமைத்து, தினமும் லாரிகளை ேசாதனை செய்தால் இதுபோல் நிறைய லாரிகள் பிடிபட வாய்ப்புகள் உள்ளன.