தொடக்க கூட்டுறவு வங்கி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
- எம்.சி.எஸ் திட்டத்தை கைவிட வேண்டும்.
- தள்ளுபடி தொகையை வட்டியுடன் வழங்க வேண்டும்.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்கத்தினர் 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பேரணி மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மாவட்ட தலைவர் சத்தியசீலன் தலைமை தாங்கினார்.
மாவட்ட செயலாளர் பரதன் முன்னிலை வகித்தனர். பொருளாளர் தாமரைச்செல்வன் வரவேற்றார்.
ஆர்ப்பாட்டத்தில் மாநில சங்கத்தின் கடலூர் மாவட்ட செயலாளர் பாண்டியன் உள்ளிட்ட பல்வேறு நிர்வாகிகள் கண்டன உரையாற்றினார்.
அப்போது எம்.சி.எஸ் திட்டத்தை கைவிட வேண்டும், தள்ளுபடி தொகையினை வட்டியுடன் வழங்கிட வேண்டும், நகை கடன் ஏலத்தில் நஷ்டம் என்று கூறி பணியாளர்களை பழி வாங்குவதை கைவிட வேண்டும், ஊதிய உயர்வு வழங்கிட வேண்டும் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
இதில் துணைத் தலைவர்கள் கிருஷ்ணகுமார், கோபிநாதன், இணை செயலாளர்கள் அரபுபுனிசாபேகம், கோபிநாத் உள்ளிட்ட ஏராளமானர்கள் கலந்து கொண்டனர்.