புதிய அங்கன்வாடி கட்டிடம் திறப்பு விழா
- அங்கன்வாடிக்கு மேஜை, பீரோ, நாற்காலிகள், தண்ணீர் டிரம், மற்றும் தேவையான சாமான்கள் சீர்வரிசையாக எடுத்து வரப்பட்டன.
- இயற்கை உணவுகளான கேழ்வரகு கூழ், முளை கட்டிய பயிர், சுண்டல், கேழ்வரகு கொழுக்கட்டை அனைவருக்கும் கொடுக்கப்பட்டன.
திருத்துறைப்பூண்டி:
திருத்துறைப்பூண்டி அருகே கட்டிமேடு ஊராட்சியில் புதிய அங்கன்வாடி கட்டிடம் திறப்பு விழா, ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி சுற்று சுவர், அங்கன்வாடி சீர்வரிசை திருவிழா மற்றும் மரம் நடுவிழா நிகழ்ச்சி நடைபெற்றது. ஊராட்சி மன்றத் தலைவர் மாலினி ரவிச்சந்திரன் தலைமை வகித்தார்.
வட்டார வளர்ச்சி அலுவலர்கள் (வட்டார வளர்ச்சி) விஜயகுமார், (கிராம ஊராட்சி) சிவக்குமார், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர் கண்ணகி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பாலு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முன்னதாக அங்கன்வா டிக்கு மேஜை, பீரோ, நாற்காலிகள், தண்ணீர் டிரம், மற்றும் தேவையான சாமான்கள் சீர்வரிசையாக எடுத்து மேழ தாள நாதஸ்வரத்துடன் எடுத்து செல்லப்பட்டன. நிகழ்வில் நம்பிக்கை தொண்டு நிறுவன இயக்குனர் சவுந்தரராஜன், திட்ட மேலாளர் விஜயா, பாலம் தொண்டுநிறுவனம் செந்தில், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் ராஜேஸ்வரி, மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வராணி, ஓவர்சியர் மகேந்திரன், டெல்டா ரோட்டரி சங்கத் தலைவர் ரமேஷ், அங்கன்வாடி ஆசிரியை ராஜேஸ்வரி, மற்றும் துணைத் தலைவர் பாக்கியராஜ், செயலர் புவனேஸ்வரன், கிராம நிர்வாக அலுவலர் முகம்மது யூசுப், மாவட்ட குழு உறுப்பினர் சுஜாதா, காவல் உதவி ஆய்வாளர் முருகவேல், கல்வியாளர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக கட்டிடம் கட்டி கொடுத்த ஒப்பந்தக்காரர் செந்தில், மற்றும் கட்டிடப்பணி செய்த மேஸ்த்திரி அய்யப்பன் மற்றும் வந்திருந்த சிறப்பு விருந்தினர்கள் அனைவரையும் கட்டிமேடு ஊராட்சியின் சார்பாக ஊராட்சி மன்ற தலைவரால் கவுரவபடுத்தப்பட்டனர்.
நிகழ்வில் இயற்கை உணவுகள் கேழ்வரகு கூழ், முளை கட்டிய பயிர் சுண்டல், கேழ்வரகு கொழுக்கட்டை அனைவருக்கும் கொடுக்க ப்பட்டன. இறுதியில் கல்வியாளர் ரவிச்சந்திரன் நன்றி கூறினார்.