உள்ளூர் செய்திகள்

சங்கர் பாலிடெக்னிக் கல்லூரியில் பெண்கள் முன்னேற்ற பிரிவு தொடக்கம்

Published On 2023-07-14 09:16 GMT   |   Update On 2023-07-14 09:16 GMT
  • நந்தினி மாணவிகள் தலைவராகவும், ஐஸ்வர்யா துணைத் தலைவராகவும் பதவி ஏற்றுக்கொண்டனர்.
  • வேலைவாய்ப்பு மூலம் பெண்களுக்கு அதிகாரம் அளிக்க வேண்டும் என்று டி.எஸ்.பி. புஷ்பராஜ் கூறினார்.

நெல்லை:

நெல்லை தாழையூத்து அருகே உள்ள சங்கர் நகர் சங்கர் பாலிடெக்னிக் கல்லூரியில் பெண்கள் முன்னேற்றப் பிரிவு தொடக்க விழா நடைபெற்றது. மாணவி ரோகினி வரவேற்று பேசினார். கல்லூரி முதல்வர் சங்கர சுப்ரமணியன் கலந்து கொண்டு மகளிர் முன்னேற்றப் பிரிவை தொடங்கி வைத்தார்.

விழாவில் நந்தினி மாணவிகள் தலைவராகவும், ஐஸ்வர்யா துணைத் தலைவராகவும் பதவி ஏற்றுக்கொண்டனர். தொடர்ந்து அனைத்து மாணவிகளும் மகளிர் எழுச்சி பாடலை பாடினர். நிர்வாக அதிகாரி சீனிவாசன் வாழ்த்தி பேசினார். விழாவில் தாழையூத்து டி.எஸ்.பி. புஷ்பராஜ் கலந்து கொண்டு பேசுகையில், வேலைவாய்ப்பு மூலம் பெண்களுக்கு அதிகாரம் அளிக்க வேண்டும் என்றார்.

தொடர்ந்து அவர், சமூகத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் மறைக்கப்பட்ட பிரச்சனைகள் மற்றும் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கான முன்னெச்சரிக்கைகள் குறித்தும், போக்சோ சட்டம் குறித்தும், பாலியல் குற்றங்க ளிலிருந்து குழந்தைகளைப் பாதுகாப்பது மற்றும் குண்டர் சட்டங்கள் குறித்து மாணவிகளுக்கு விளக்கி கூறினார்.

பின்னர் தாழையூத்து அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் சீதாலட்சுமி, சமூக அச்சுறுத்தல்கள், மொபைல் மிரட்டல்கள் குறித்து மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியும், சமுதாயத்தில் சுயமரியாதை பெறுவதை வலியுறுத்தியும் பேசினார்.

மேலும் மீட்பு எண் 1930 குறித்து எடுத்து கூறினார். அப்போது மாணவிகள் எழுப்பிய கேள்விகளுக்கு இன்ஸ்பெக்டர் சீதாலட்சுமி விளக்கம் அளித்தார். முன்னதாக நூலகர் விஜயலட்சுமி விருந்தினர்களை அறிமுகப்படுத்தினார். மாணவி சந்தியா நன்றி கூறினார்.

Tags:    

Similar News