நாச்சிகுளம் பகுதியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டித்தர வலியுறுத்தல்
- பழுதடைந்த நிலையில் இருந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இடித்து அகற்றப்பட்டது.
- நாச்சிகுளம் கிராமத்தில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது.
திருத்துறைப்பூண்டி:
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அடுத்த நாச்சிகுளம் கிராமத்திற்கு கலெக்டர் சாருஸ்ரீ ஆய்வு மேற்கொண்டார்.
அவரிடம் நாச்சிகுளம் தவ்ஹீத் ஜமாத் கிளை செயலாளர் அலாவுதீன் தலைமையில் நிர்வாகிகள் கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
உதயமார்தாண்டபுரம் ஊராட்சி அலுவலகம் அருகில் பழுதடைந்த நிலையில் இருந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இடித்து அகற்றப்பட்டது. அதற்கு மாற்றாக நாச்சிகுளம் பகுதிக்கு புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டித்தர வில்லை.
இதனால் நாச்சிகுளம் கிராமத்தில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது.
இந்நிலையில், புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டுவதற்கு அனுமதி கிடைத்ததாக சொல்லப்பட்ட நிலையில் அதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எனவே, கிராமமக்கள் நலனை கருத்தில் கொண்டு நாச்சிக்குளம் பகுதியில் புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.