நாகை அரசு ஆஸ்பத்திரியில் உணவு பாதுகாப்பு அலுவலர் ஆய்வு
- சமையல் தயாரிப்பிற்கு பயன்படும் மூலப்பொருட்கள், காய்கறி உள்ளிட்டவை ஆய்வு செய்யப்பட்டது.
- சமைத்த உணவுகள் உணவு மாதிரி எடுத்து வைக்கவும் அறிவுரை வழங்கப்பட்டது.
நாகப்பட்டினம்:
சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சமையலறையில் உள்ள சுகாதாரக்கேடு தொடர்பாக செய்தி வெளியானதைத் தொடர்ந்து, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் உத்தரவின்படி, தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் உள்ள சமையல் கூடங்களில் உணவு பாதுகாப்புத்துறை சார்பில் ஆய்வு நடத்தப்படுகிறது.
அந்த வகையில், நாகப்பட்டினம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை சமையல் கூடத்தை, நகராட்சி உணவு பாதுகாப்பு அலுவலர் அன்பழகன் ஆய்வு மேற்கொண்டார்.
சமையலறை சுத்தமாக பராமரிக்கப்படுகிறதா ? உணவு பொருட்கள் இருப்பு வைக்கும் இடம், சமையல் தயாரிப்பிற்கு பயன்படும் மூலப்பொருட்கள், காய்கறி உள்ளிட்டவை ஆய்வு செய்யப்பட்டது. சமையலர் மற்றும் உதவியாளர்கள் தன்சுத்தத்தை பேணவும், தேவையான அளவு சமைத்த உணவுகள் உணவு மாதிரி எடுத்து வைக்கவும் அறிவுரை வழங்கப்பட்டது. தொடர்ந்து கண்காணிப்பு மேற்கொள்ளப்படும் என்று அவர் தெரிவித்தார்.