நீலகிரியில் ஒருங்கிணைந்த லோன் மேளா
- கடன் திட்டங்கள் குறித்த ஒருங்கிணைந்த லோன் மேளா 6-ந் தேதி நடக்கிறது.
- சிறுபான்மையின இனத்தை சேர்ந்தவர்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி கடன் உதவிகளை பெற்று பயன் அடையலாம்.
ஊட்டி,
நீலகிரி மாவட்ட கலெக்டர் அம்ரித் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-நீலகிரி மாவட்டத்தில் தாட்கோ- தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம், டாப்செட்கோ-தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகம், டாம்கோ(தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக்கழகம்) மற்றும் மாவட்ட தொழில் மையம் ஆகிய துறைகளின் சார்பில் செயல்படுத்தப்படும் கடன் திட்டங்கள் குறித்த ஒருங்கிணைந்த லோன் மேளா நாளை 6-ந் தேதி நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடக்கிறது. எனவே ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையின இனத்தை சேர்ந்தவர்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி கடன் உதவிகளை பெற்று பயன் அடையலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.