தேனியில் ராஜவாய்க்கால் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தீவிரம்
- பொதுப்பணி நீர்வளத்துறைக்கு சொந்தமான இந்த கால்வாய் பகுதி 30 ஆண்டுகளுக்கு மேலாக கடைகள், வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களின் வளாக பகுதி என ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டு இருந்தது.
- தேனி ராஜவா ய்க்கால் ஆக்கிரமிப்புகளை மீட்க பழைய பஸ் நிலை யத்தில் ஆக்கிரமிப்புகள் பொக்லைன் இயந்திரத்தின் மூலம் இடிக்கப்பட்டது.
தேனி:
தேனி நகரில் பிரதான கால்வாயாக உள்ள ராஜ வாய்க்கால் கொட்டக்குடி ஆற்றில் இருந்து பிரிந்து தேனி பழைய பஸ் நிலையம் வழியாக மதுரை சாலையில் உள்ள தாமரைக்குளம் கண்மாய் வரை செல்கிறது.
பொதுப்பணி நீர்வள த்துறைக்கு சொந்தமான இந்த கால்வாய் பகுதி 30 ஆண்டுகளுக்கு மேலாக கடைகள், வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களின் வளாக பகுதி என ஆக்கிர மிப்புகள் செய்யப்பட்டு இருந்தது. இந்த ஆக்கிர மிப்புகளால் ராஜவாய்க்கால் அளவு ஆண்டுக்கு ஆண்டு குறைந்து கொண்டே போய் சாக்கடை போல் மாறி விட்டது. அதன்காரணமாக கால்வாயில் நீர் செல்வது அரிதாகி விட்டது. மேலும் சாக்கடை போல் மாறிய கால்வாய் பகுதியில் ஆக்கிர மிப்பு மற்றும் கழிவுகள் அடைக்கப்பட்டிருப்பதால் மழை பெய்யும் நாட்களில் தேனி நகரில் வழிந்தோடும் நீர் செல்ல வழியின்றி சாலைகளில் தேங்கும் அவலநிலை ஏற்பட்டு வந்தது.
இதனால் ராஜவாய்க்கால் பகுதியை ஆக்கிரமிப்பின் பிடியில் இருந்து மீட்க வேண்டும் என பலமுறை கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. இருப்பினும் ராஜ வாய்க்கால் ஆக்கிரமி ப்புகளை அகற்ற நட வடிக்கை எதுவும் எடுக்க வில்லை.
இந்நிலையில் தேனியை சேர்ந்த தனி நபர் ஒருவர் தொடர்ந்த வழக்கில் உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவுப்படி தேனியில் உள்ள பிரதான ராஜ வாய்க்கால் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி கடந்த 5 நாட்களுக்கு முன்பு தொடக்கப்பட்டது.
இந்த ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி, பொதுப்பணி நீர்வளத்துறை மற்றும் வருவாய்துறையினர் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் தேனி கொட்டக்குடி ஆற்றில் இருந்து தாமரைக் குளம் கண்மாய் பகுதி வரையிலான ஆக்கிரமிப்புகள் அகற்ற ப்பட்டு வருகின்றன.
இவற்றில் ராஜவாய்க்கால் ஆக்கிரமிப்புகள் கட்டிடங்களுக்கு பின்புறமே எடுக்கப்பட்டு வந்ததால் பொதுமக்கள் மத்தியில் பெரிய அளவில் பேசவோ, பரபரப்போ ஏற்படுத்த வில்லை. ஆனால் ராஜவாய்க்கால் பகுதி தேனி பழைய பஸ் நிலையத்தின் வழியாக அடியில் செல்வ தால் பழைய பஸ் நிலை யத்தில் அமைக்கப்பட்டிருந்த கடைகள், மாடியில் செயல்பட்டு வந்த பூ மார்க்கெட், தரை வாடகை கடைகள் போன்றவை அகற்றப்பட்டது. அதனால் தேனி பழைய பஸ் நிலை யத்தின் வழியாக பஸ்கள் வந்து செல்ல அனுமதிக்க ப்படாமல் தற்காலிகமாக பஸ்நிலையம் மூடப்பட்டது.
இதனால் தேனியில் இருந்து கம்பம், போடி செல்லும் பஸ்கள் சாலை பகுதியிலே பயணிகளை ஏற்றி, இறக்கி வருகின்றனர். இதற்கிடையே பழைய பஸ் நிலையத்திற்கு வெளியே தேனி அல்லிநகரம் நகராட்சி சார்பில் சாக்கடை கால்வாய் தூர் வாரும் பணியும் நடந்தது. இதன்கார ணமாக பொதுமக்கள் மத்தியில் ராஜவாய்க்கால் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி குறித்து காட்டு தீ போல் பரவி பரபரப்பை ஏற்படு த்தியது.
தேனி ராஜவா ய்க்கால் ஆக்கிரமிப்புகளை மீட்க பழைய பஸ் நிலை யத்தில் ஆக்கிரமிப்புகள் பொக்லைன் இயந்திரத்தின் மூலம் இடிக்கப்பட்டதை பொதுமக்கள் ஆர்வத்துட னும், ஆச்சரியத்துடன் பார்த்து, பரபரப்பாக பேசிவிட்டு சென்றனர். இந்த ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தேனி-மதுரை சாலையில் ராஜவாய்க்கால் செல்லும் தாமரைக்குளம் வரை பாரபட்சமின்றி தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.