உள்ளூர் செய்திகள்

விழாவில் கலந்து கொண்டவர்களை படத்தில் காணலாம்.

தாண்டிக்குடியில் சர்வதேச காபி தினவிழா

Published On 2022-10-05 10:20 IST   |   Update On 2022-10-05 10:20:00 IST
  • தாண்டிக்குடி மண்டல காபி ஆராய்ச்சி நிலையத்தில் 8-வது சர்வதேச காபி தினவிழா கொண்டாடப்பட்டது.
  • காபிக்கு இயற்கை விவசாய சான்றிதழ் பெறுவது, காபி குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் பற்றி விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.

பெரும்பாறை:

திண்டுக்கல் மாவட்டம் தாண்டிக்குடி மண்டல காபி ஆராய்ச்சி நிலையத்தில் 8-வது சர்வதேச காபி தினவிழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு இந்திய காபி வாரியத்தின் உறுப்பினர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார்.

காபி ஆராய்ச்சிநிலைய துணை இயக்குனர் ஜெயக்குமார் முன்னிலை வகித்தார். காபி விரிவாக்க முதுநிலை அலுவலர் தங்கராஜ் வரவேற்று பேசினார். காபி தின விழாவில் ஏற்றுமதி வாய்ப்பு, காபி மதிப்பு கூட்டி விற்பனை செய்வது, காபிக்கு இயற்கை விவசாய சான்றிதழ் பெறுவது, காபி குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் பற்றி விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.

காபி ஆராய்ச்சிநிலையத்தின் விஞ்ஞானி சவுந்தரராஜன் காபி குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் பற்றி விரிவாக எடுத்துரைத்தார். முடிவில் காபி விரிவாக்க இளநிலை அலுவலர் ஜவஹர் நன்றி கூறினார். இவ்விழாவில் முன்னோடி விவசாயிகள் மங்களராஜ், எர்னஸ்ட், மணி காமாட்சி மற்றும் தாண்டிக்குடி கீழ்மலை காபி விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News