உள்ளூர் செய்திகள்
வனப்பகுதியை கண்காணிக்க டிரோன்கள் அறிமுகம்
- வனப்பகுதிகளை கண்காணிக்கும் வகையில் ட்ரோன்கள் பயன்படுத்தப்பட உள்ளன.
- 2 டிரோன்களை அதிகாரிகளிடம் மாவட்ட கலெக்டர் ரேணுராஜ் ஒப்படைத்தார்.
கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் பொதுமக்கள் காட்டு விலங்குகளால் தாக்கப்படுவதை தடுக்கும் விதமாக வனப்பகுதிகளை கண்காணிக்கும் வகையில் டிரோன்கள் பயன்படுத்தப்பட உள்ளன.
"வயநாடு முன்முயற்சி" என்ற திட்டத்தின் கீழ் வாங்கப்பட்ட 2 டிரோன்களை வனத்துறை அதிகாரிகளிடம் மாவட்ட கலெக்டர் ரேணுராஜ் ஒப்படைத்தார். அப்போது அவர் புதிய டிரோன்களை பறக்கவிட்டார்.