சிறுதானிய உணவகம் அமைத்திட மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்ளுக்கு அழைப்பு
- மகளிர் குழு தொடங்கப்பட்டு குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் முடிவுற்று இருக்க வேண்டும்.
- தேசிய ஊரக வாழ்வாதார இணையதளத்தில் பதிவு பெற்றிருத்தல் வேண்டும்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் சிறுதானிய உணவகம் அமைத்திட வருகிற 27ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் சரயு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு 2023ம் ஆண்டு சர்வதேச சிறுதானிய ஆண்டாக கொண்டாட்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக தமிழ்நாடு அரசு அனைத்து மாவட்ட கலெக்டர் பெருந்திட்ட வளாகத்தில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் சிறுதானிய உணவகம் அமைத்திட உத்தேசிக்கப்பட்டுள்ளது. இந்திய வேளாண்மையில் முதன்மையாக விளங்க கூடிய சிறுதானியங்கள் விவசாயிகளின் வருமானத்தை உயர்த்துவதுடன் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பை உறுதி செய்கின்றன.
தமிழ்நாடு அரசு சிறுதானிய உணவு வகைகளை பிரபலப்படுத்த பல்வேறு முயற்சிகளை மேற்கொண்ட வருகிறது. அதன் ஒரு பகுதியாக மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் மூலம் சிறுதானிய உணவகம் அமைத்திட உரிய நிபந்தனைகளுடன் விண்ணபங்கள் வரவேற்கப்படுகின்றன.
சிறுதானிய உணவகம் நடத்திட விருப்பமுள்ள மகளிர் சுய உதவிக்குழுக்கள், உற்பத்தியாளர் குழுக்கள், கூட்டமைப்புகள் ஆகியவற்றிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மகளிர் குழு தொடங்கப்பட்டு குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் முடிவுற்று இருக்க வேண்டும். தேசிய ஊரக வாழ்வாதார இணையதளத்தில் பதிவு பெற்றிருத்தல் வேண்டும். கூட்டமைப்பாக இருக்கும் பட்சத்தில் தர மதிப்பீடு செய்யப்பட்டு "ஏ" அல்லது "பி" சான்று பெற்றிருக்க வேண்டும். உற்பத்தியாளர் குழுவாக இருக்கும் பட்சத்தில் தர மதிப்பீடு செய்யப்பட்டு திட்ட நிதி பெறப்பட்டிருக்க வேண்டும்.
மகளிர் சுய உதவிக்குழு, உற்பத்தியாளர் குழு, கூட்டமைப்பு சிறுதானிய உணவு உற்பத்தி மற்றும் சிறுதானிய மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிப்பில் ஆர்வம் மற்றும் முன் அனுபவம் உடையவராக இருத்தல் வேண்டும். மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகம் அமைந்துள்ள அல்லது அதனை சுற்றியுள்ள ஊராட்சியின் மகளிர் சுய உதவிக்குழு, உற்பத்தியளர் குழு, கூட்டமைப்பு மட்டுமே தேர்வு செய்ய வேண்டும் என்ற நிபந்தனைகளுடன் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
எனவே, ஆர்வமுடையவர்கள் திட்ட இயக்குநர், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் (மகளிர் திட்டம்), அறை எண்.106, மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம், கிருஷ்ணகிரி என்ற முகவரிக்கு விண்ணப்பங்களை தபால் மூலமாகவோ அல்லது நேரிலோ வருகிற 27ம் தேதி பிற்பகல் 3 மணிக்குள் சமர்ப்பிக்குமாறு தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு தனது செய்திக்குறிப்பில் கலெக்டர் சரயு தெரிவித்துள்ளார்.