உள்ளூர் செய்திகள்

ரத்ததானம் முகாமை கலெக்டர் ஷஜீவனா தொடங்கி வைத்தார்.

தேனியில் காமராஜர் பிறந்த நாள் விழாவையொட்டி ஊர்வலம்- ரத்ததான முகாம்

Published On 2023-07-15 04:46 GMT   |   Update On 2023-07-15 04:46 GMT
  • விழாவில் தேனி நாடார் சரசுவதி அனைத்து கல்வி நிறுவனங்களின் சார்பாக சிறப்பு ஊர்வலம், அலங்கார ஊர்திகள் அணிவகுப்பு நடைபெற்றது. இந்த அணிவகுப்பில் சுமார் 6,500 மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.
  • மாவட்ட கலெக்டர் ஷஜீவனா ரத்ததானம் வழங்குவது குறித்து மாணவர்கள் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டுமென்றும் சிறப்புரை ஆற்றினார்.

தேனி:

தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறை மற்றும் நாடார் சரசுவதி அனைத்து கல்வி நிறுவனங்கள் சார்பில் பெருந்தலைவர் கர்மவீரர் காமராஜர் 121-வது பிறந்தநாள் விழா மற்றும் கல்வித்திருநாள் நாடார் சரசுவதி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. விழாவிற்கு தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறையின் தலைவர் ராஜமோகன் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் ஆனந்தவேல், பொருளாளர் பழனியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்து காமராஜரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இந்த விழாவில் தேனி நாடார் சரசுவதி அனைத்து கல்வி நிறுவனங்களின் சார்பாக சிறப்பு ஊர்வலம், அலங்கார ஊர்திகள் அணிவகுப்பு நடைபெற்றது. இந்த அணிவகுப்பில் சுமார் 6,500 மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். மேலும் தேனி அரசு மருத்துவமனை மற்றும் நாடார் சரசுவதி கல்வி நிறுவனங்களின் சார்பாக நடைபெற்ற ரத்த தானம் முகாமை மாவட்ட கலெக்டர் ஷஜீவனா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். மேலும் ரத்ததானம் வழங்குவதன் அவசியத்தை பற்றி மாணவ, மாணவிகளிடம் எடுத்துரைத்து, ரத்ததானம் வழங்குவது குறித்து மாணவர்கள் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டுமென்றும் சிறப்புரை ஆற்றினார்.

இந்த ரத்ததானம் முகாம் 2 நாட்கள் நடைபெற்றது. இதில் முதல் நாள் நடைபெற்ற ரத்ததான முகாமில் நாடார் சரசுவதி கல்வி நிறுவனங்களின் ஆசிரியர்கள், மாணவர்கள், தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறை உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் என 300 பேர் ரத்ததானம் செய்தனர்.

இந்த விழாவில் தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறை ஆட்சிமன்றக்குழு உறுப்பினர்கள், நாடார் சரசுவதி அனைத்து கல்வி நிறுவனங்களின் செயலாளர்கள், இணைச்செயலாளர்கள், முதல்வர்கள், தலைமை ஆசிரியர்கள், துணை முதல்வர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News